Advertisement

கர்ணன்

Share

தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்
இயக்கம் - மாரி செல்வராஜ்
இசை - சந்தோஷ் நாராயண்
நடிப்பு - தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 3.75/5

ஒரு இனம், ஒரு மொழி என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு இன்னமும் சாதிய வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அடிக்கடி சாதிய மோதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் இதுநாள் வரையிலும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய படங்கள் அதிகம் வந்ததில்லை. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரது வருகைக்குப் பின் அந்த மக்களின் வலிகளைச் சொல்லும் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படமும் அப்படியான ஒரு படம்தான்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் இந்த சாதிய வேறுபாடுகளை கொஞ்சம் மென்மையாகக் கையாண்டிருந்தார். ஆனால், இந்த கர்ணன் படத்தில் நாயகனை வாளேந்த வைத்து அவர்களது உரிமைக்காகப் போராட வைத்திருக்கிறார். போர் என்றாலே ரத்தமில்லாமலா இந்த கர்ணனும் ரத்தம் சிந்துகிறார், மற்றவர்களையும் ரத்த சிந்த வைக்கிறார். இந்த ரத்தம் மட்டும் அதிகம் தெறிக்காமல் இருந்திருந்தால் படத்தை இன்னும் அதிகமாகக் கொண்டாடுவார்கள்.

தமிழ்நாட்டில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 1995ம் ஆண்டு இரு சாதி மக்களிடையே நடைபெற்ற மோதல் காரணமாக பெரும் கலவரம் வெடித்தது. கொடியன்குளம் என்ற கிராமத்திற்குள் புகுந்து போலீசார் கோர தாண்டவம் ஆடினர். போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருவர் கொல்லப்பட்டனர், 500 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்தது.

அந்த கொடியன்குளம் கலவரத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்படத்தில் உள்ள கிராமத்திற்கு வைக்கப்பட்டுள்ள பொடியன்குளம் என்ற பெயரிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

படத்தில் நாயகன் தனுஷின் கதாபாத்திரப் பெயர் கர்ணன், அவரது காதலி ரெஜிஷா விஜயன் பெயர் திரௌபதி. ஊரில் உள்ள மற்ற கதாபாத்திரங்களுக்கும் மகாபாரதக் கதாபாத்திரப் பெயர்களையே வைத்திருக்கிறார் இயக்குனர். போலீஸ் எஸ்.பி. நட்ராஜ் பெயர் கண்ணபிரான். தங்கள் உரிமையைக் கேட்கும் கிராமத்து மக்களின் போராட்டத்தை அவர் மகாபாரதப் போருடன் ஒப்பிடுகிறாரோ ?.

பொடியன்குளம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களது கிராமத்தில் எந்த ஒரு பேருந்தும் நிற்காது. ஆனால், பக்கத்து கிராமமான மேலூரில்தான் நிற்கும். அந்தக் கிராமத்தில் உள்ள வேறு சாதி மக்களுக்கு இந்த பொடியன்குளம் கிராமத்து மக்கள் தங்களது கிராமத்தில் வந்து பேருந்து ஏறுவதை வெறுப்பவர்கள். அதனால், இரு கிராமத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதலும் நடைபெறுவதுண்டு.

தங்கள் கிராமத்தில் பேருந்து நிற்க அவர்கள் எவ்வளோ முயற்சித்தும் நடக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேருந்தை அடித்து உடைக்கிறார்கள். அதை கிராமத்து இளைஞன் கர்ணன் (தனுஷ்) முன்னின்று செய்கிறார். ஊருக்குள் போலீஸ் வருகிறது. எஸ்.பி. கண்ணபிரானை (நட்ராஜ்) ஊர் மக்கள் அவமதித்து அனுப்புகிறார்கள். அந்தக் கோபத்தில் ஊர் பெரியவர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து கடுமையாகத் தாக்கி அவர்களை சிறை வைக்கிறார். தனுஷ் மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்த ஸ்டேஷனையே சூறையாடி தங்கள் கிராமத்துப் பெரியவர்களை மீட்டு வருகிறார்கள்.

திரும்பவும் போலீஸ் கிராமத்திற்குள் வரும் என நினைக்கும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊருக்குக் காவல் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கர்ணனுக்கு சிஆர்பிஎப் வேலையில் சேர ஆர்டர் வருகிறது. ஊர் மக்கள் அவரை வேலைக்குச் சேர வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார்கள். அந்த சமயத்தில் போலீசார் பெரும் படையுடன் ஊருக்குள் வருகிறார்கள். கிளம்பிச் சென்ற தனுஷ் திரும்பி வந்தாரா, ஊருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

அசுரன் படத்திற்குப் பிறகு மீண்டும் அசுரத்தமான நடிப்பில் தனுஷ். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவரை தனுஷ் என நினைத்துப் பார்க்க முடியாமல் கர்ணன் என்றே நினைத்துப் பார்க்க முடிகிறது. சாதாரண பழைய லுங்கி, ஒரு சட்டை அவ்வளவுதான் தனுஷின் காஸ்ட்யூம். தனுஷைத் தவிர இன்றைய வேறு எந்த ஒரு நடிகராவது இந்தக் கதாபாத்திரத்தில் இப்படி அசுர பலத்துடன் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை படத்திற்குப் படம் வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்கிறார் தனுஷ். இந்த கர்ணன் படத்தையும் தேசிய விருதுகளுக்கான சில பல பட்டியல்களில் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.

படத்தின் நாயகியைப் பற்றி சொல்வதற்கு முன்பு தனுஷ் கூடவே இருக்கும் ஊரின் தாத்தா லால்-ஐப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு மலையாள நடிகர் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்துத் தாத்தாவாக அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் மஞ்சனத்தி பாடல் பாடும் போது நம் கண்களையும் கலங்க வைத்துவிடுகிறார் மனிதர்.

படத்தின் நாயகி ரெஜிஷா விஜயனை விட தனுஷின் அக்காவாக நடித்திருக்கும் லட்சுமிப்ரியா சந்திரமௌலி மனதில் இடம் பிடிக்கிறார். தான் ஆசையாக வளர்த்த தம்பி தடம் மாறிப் போகிறானோ என்ற கவலையில் அவரை அடித்து கேள்வி கேட்கும் ஒரு காட்சியிலேயே நின்று விடுகிறார். பக்கத்தில் மகனுக்கு ஆதரவாய் பேசும் அம்மாவைக் கூட ஒரு தட்டு தட்டி விட்டுச் செல்லும் போது தியேட்டரில் கைதட்டுகிறார்கள். படத்தில் சென்டிமென்ட் இல்லையே என்று சொல்பவர்களுக்கு இந்த அக்கா சென்டிமென்ட்டும், படத்தின் ஆரம்பக் காட்சியில் இறந்து போகும் தனுஷின் தங்கை சென்டிமென்ட்டும் நெகிழ வைத்துவிடும்.

மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். முதல் படத்திலேயே சவாலான முத்திரை பதிக்கும் ஒரு கதாபாத்திரம். கிடைத்த அறிமுக வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தனுஷ் மீது தீராத காதலுடன் சுற்றி வருகிறார். அவர் பார்க்கும் காதல் பார்வையில் படம் பார்க்கும் ரசிகர்களே சொக்கிப் போய்விடுவார்கள் போலிருக்கிறது. இவர் கதாபாத்திரத்தை காதலுக்காக மட்டுமேதான் இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது கொஞ்சம் நெருடல்.

ரெஜிஷாவின் அண்ணனாக யோகி பாபு குணச்சித்திர வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறார். தனுஷின் அப்பாவாக பூ ராம், அம்மாவாக நடித்திருப்பவர், கல்லூரியில் படிக்க ஆசைப்படும் இளம் பெண்ணாக 96 கௌரி கிஷன், குதிரையை வளர்க்கும் அந்தச் சிறுவன், பக்கத்து ஊர் பெரிய மனுஷனாக சில காட்சிகளில் வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

தன்னையே அவமானப்படுத்தி விட்டார்களே என்ற அகம்பாவத்துடன் இருக்கும் கர்வமான காவல்துறை அதிகாரியாக நட்ராஜ். ஒரு போலீஸ் அதிகாரி நினைத்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை அவரது அதிரடி மூலம் காட்டியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் மற்றொரு கதாபாத்திரம் என்று சொல்லுமளவிற்கு அமைந்துள்ளது. கண்டா வரச் சொல்லுங்க பாடல் ஒரு சரியான ஆக்ஷன் காட்சியில் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமே, அதை படத்தின் டைட்டில் பாடலாக வைத்துவிட்டார்கள்.

பொடியன்குளம் கிராமம் செட்டை ஒரு நிஜமான கிராமம் போல உருவாக்கியுள்ளார் கலை இயக்குனர் ராமலிங்கம். 90களின் இறுதி காலகட்டத்தில் நடக்கும் கதை. அந்தக் காலத்து காட்சிகளை அப்படியே தனது ஒளிப்பதிவின் மூலம் யதார்த்தமாய் பதிய வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

ஒரு வரியில் சொல்வதென்றால் பொடியன்குளம் கிராமத்தில் பேருந்து நிற்கவில்லை, அதற்காக மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை எனச் சொல்லிவிடலாம். ஆனால், அதற்கு திரைக்கதை அமைத்து அழுத்தமான காட்சிகளுடன், ஷார்ப்பான வசனங்களுடன் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை அழுத்தம் திருத்தமாய் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். படத்தின் நீளம், மீண்டும் சாதிய மோதல் படம், ரத்தம் தெறிக்கும் வன்முறை ஆகியவை படத்திற்குக் கொஞ்சம் மைனஸ்.

கர்ணன் - காவல் தெய்வம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

 • Ganesan - Chennai,இந்தியா

  Kurai,Nirai ru jaathilayum irukutju, real story is different. Kodiyankulam people not poor. Police went there to arrest one person, but they are not allowed police inside

 • திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா

  ஜாதிவெறி பிடித்த இந்தப்படத்துக்கெல்லாம் இப்படி ஒரு விமர்சனம் தேவையா....

 • திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா

  தமிழ் சினிமாவில்தான் ஜாதிவெறி கொழுந்து விட்டு எரிகிறது... எத்தனை ஆண்டுகளானாலும் ஜாதிவெறியை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றனர் தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள்... ஜாதிவெறியை வைத்து இவர்கள் கல்லா கட்டுகின்றனர்...

 • mindum vasantham - madurai,இந்தியா

  போலீஸ் காக்க வைக்கும் அசின் அருமை நானே தனியாக இருக்கும் பொது போலீஸ் வேறு மாறியும் அதிகம் காக்க வ௮ய்த்தும் சிபார்சுடன் இருக்கும் பொது வேறு மாறியும் நடத்தியுள்ளனர்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Sila jathikkal aruvalu thookuvathu pol nadikarkalai vaithyhu edupathu than tr

 • Ravi Shankar - Chennai,இந்தியா

  சில படம் வருவதற்கு முன்பே பார்க்க வேண்டிய படம் என்று நோட் செய்து படம் வந்தவுடன் பார்த்து விடுவோம். பார்த்த பின்பு பெருமான்மையான படங்கள் மீது அவ்வளவு எதிர்பார்ப்பு வைத்தது தப்போ என தோன்றும். அப்படி பட்ட படம் இந்த கர்ணன். ஒரு இயக்குனர் ஒரு கதையை கையாளும் விதத்தில் அவரின் தெரிவும் விசாலமான அறிவும் சாதாரண ரசிகனுக்கும் புலப்பட வைப்பர். இதைத்தான் வெற்றிமாறன் தன்னுடைய ஆடுகளம், விசாரணை மற்றும் அசுரன் படங்களில் புலப்படுத்தியிருப்பார். சிறு விகிதாச்சாரத்தில், இந்த முறை, மாரி செல்வராஜ் மிஸ் பண்ணிட்டார். திரைக்கதையில் அவருக்கு ஏற்பட்ட குழப்பத்தால், கிளைமாக்ஸில் வர வேண்டிய 'கண்டா வர சொல்லுங்க' பாடல் டைட்டில் சோங் வந்ததில், படத்தின் நாயகனின் உச்சகட்ட தியாகம் முதலில் தெரிவதால், நிறைய சீன் சாதாரணமாக செல்வதை தவிர்க்க முடியவில்லை. பஸ் நிற்காமல் சென்ற விஷயத்தை சொல்ல இரண்டு மணி நேரம் எடுத்தவர், ஒரு மாவட்ட காவல் அதிகாரிக்கு கொடுத்த தண்டனைக்காக அவரும் அவர் ஊர் மக்களும் எங்கனம் கஷடப்பட்டார்கள் என்று சொல்ல இரண்டு சீன் கூட வைக்கவில்லை. அத்தகைய முக்கியமான நிகழ்வு சரியாக கையாளப்படவில்லை. ஒரு உண்மை கதையை சொல்லும் பொது, நடு நிலைமையை தவறாது சொல்ல வேண்டிய பெரும் கடமை இயக்குனருக்கு வேண்டும். பல இடங்களில் அத்தகைய நிலைமையை மறந்தது தெரிகிறது. என்ன குறை இருப்பினும், இருபது வருடத்திற்கு முந்தய ஒரு வாழ்வியல் பிரச்சனையை அதன் வலி குறையாமல் பதிவு செய்ததற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். என்றாலும், இது போன்ற பாராட்டின் உள்ளே அவருக்கு அடுத்த படத்திற்கான பொறுப்பு உணர முடியும் என்று நம்புகிறோம்.

 • தேனி ஆனந்த் -

  மிகச்சிறந்த சினிமா இயக்குனர்களான மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் இந்தக்காலத்தில் இப்படி பிரிவினைவாதத்தை தூண்டும் படங்களை எடுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.....படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட இளம்தலைமுறைகள்எப்பவோ ஜாதியை மறந்துவிட்டார்கள்.. சாதியை மறந்து சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறை இது போன்ற படங்களை இனி ஆதரிக்காது.. கிளம்பு கிளம்பு அந்துபோச்சு கிளம்பு கிளம்பு.........

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  தமிழக மக்கள் மறந்து அதனால் மறைந்து கொண்டிருக்கும் ஜாதி வேற்றுமைகளை மீண்டும் ஞாபகப்படுத்தி வேற்றுமையை விதைக்கும் இந்தமாதிரி படங்களால் சமுதாயத்திற்கு கெடுதல்களே விளையும். இம்மாதிரி ஜாதிய வன்முறை படங்களை தடை செய்தால் நல்லது.

 • sathyam - Delhi,இந்தியா

  மாரி செல்வராஜ் ஒரு ஜாதிக்காரனை ரொம்ப ரொம்ப நல்லவன் போலவும் (ஒருத்தன் கூட கெட்டவன் இல்லையாம்). அடுத்த சாதிக்காரன எல்லாரும் ரொம்ப கேடு கெட்டவர்கள் போலவும் நல்ல முட்டு கொடுத்து இருக்கான் . நமக்கு தானே இது எவ்வளவு உண்மைன்னு தெரியும் ?

 • Devan - Chennai,இந்தியா

  Is this film necessary. What it teaches to people. For the present people it is not needed. The directors are creating the problems again and again with the hope that still problems should persist so that people will fight and they will enjoy and become leaders. These directos films should be neglected by filmgoers

 • Anushya Ganapathy - Bangalore,இந்தியா

  இந்த படத்தை பத்தி நான் பேசல. ஆனா இப்போ எல்லாம் ஜாதியே பார்க்குறது இல்லன்னு சொல்றவங்களுக்கு ... நான் திருநெல்வேலி பொண்ணு. போன வருஷம் இதே ஏப்ரல் மாசம் கொரோனா வந்தப்போ, நம்ம யாருக்காச்சும் உதவி பண்ணலாம், இந்த போலீஸ்கரங்களுக்கு கொஞ்சம் நீர் மோர் ஆச்சும் செய்து குடுக்கலாம்ன்னு சொன்ன போது, என் அப்பா சொன்னது, "அவர்கல்லாம் நாம குடுத்த குடிக்க மாட்டாங்க". இந்த ஏப்ரல் வெயில் கொழுத்துது. 2. எங்க வீட்டுல மட்டும் தண்ணி வரல, நான் 10 குடம் தண்ணி எடுக்கும் போது ஏன்னு கேட்காதவங்க, அவங்க வீட்டுல தண்ணி வரலன்னுதும், பஞ்சாயத் தலைவருக்கு போன் போட்டு, நாங்க தான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி வீட்டுக்குள்ள வந்து சோதனை பண்ணிட்டு போனாங்க. 3. எங்க வீட்டுல மட்டும் முருங்கை மரம் இருக்கு. தொடக்கத்துல முருங்கைக்காய் வாங்கிட்டு இருந்த பக்கத்துக்கு வீடு, என்ன நடந்ததோ தெரியல, இப்போ வாங்குறது இல்ல. இவங்க எல்லாம் மார்க்கெட் எப்படி பொருள் வாங்குறாங்க? யாரு விளையாவச்சதுன்னு எப்படி கண்டு பிடிப்பாங்க? இதுல வேற, இவங்களுக்கு யாரு இங்க இடம் குடுத்தது வீடு கட்டன்னு, போகும் போதும் வரும் போதும் பொருமல் வேற. நானும் வேற ஏதும் காரணம் இருக்குமான்னு கேட்டு பார்த்துட்டேன், ஒன்னும் இல்ல, ஒண்ணே ஒன்னு தவிர, ஆதிதிராவிடர்-லேயே அவங்க வேறயாமா, நாங்க வேறயாமா. ஆனா இவங்க முன்னாடி கடவுள் என்ன ஆசிர்வாதமாதான் வச்சிருக்கார்.

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  நான் முன்பு சொல்லியபடி இந்த படம் கருப்பு பணத்தை வெளுத்து தரும் தனுஷ் போன்ற ஜாதி வெறி பிடித்த பொருளாதார குற்றங்கள் செய்யும் சலவையாளர்களால் ஊரை ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு ஜாதீய மொக்கை படம் என்பது நிரூபணமாயுள்ளது. இந்த மொக்கை படத்தை பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் கூட்டமாக வந்து பார்த்தாலே மூணு நாளில் 50% இருக்கைகளோடு ₹23.கோடி வசூல் என்பது சாத்தியமா?? தனுசுக்கு இப்பிடிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் எப்போதும் கிடையாது தாணு என்ற ஆள் அரசியல் கருப்பு வெளுப்பில் பலபட்டறை அதான் இந்த பினாமி பட ஏற்பாடு, வசூல் புரட்டுகள் மத்திய அரசு இது போன்ற சமூக விரோத கும்பல்களை ஒழித்தால் மட்டுமே கறுப்புப்பணம் சிறிதளவாவது இந்நாட்டில் கட்டுப்படுத்தப்படும் இந்திய சினிமா என்பது பொருளாதார குற்றவாளிகள் தகுதிக்கு மீறிய வருமானமும், சொத்தும் சேர்த்து ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டு இருக்கும் ஒரு கொள்ளைக்கார கூட்டம். முற்றிலும் அழிக்கப்படவேண்டியது

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  ஜாதிய மையப்படுத்தி வேற யாராவது அதுவும் உயர் சாதி காரர்கள் எடுத்தால் அது சமூக அநீதி அதையே ஒரு முறை கெட்ட பிரச்சாரமாக பொய்யும் புனைசுருட்டுமாக இந்த மாறி செல்வராஜ், ரஞ்சித் போன்றவர்கள் எடுத்தால் அது 'தலித் இலக்கியம்", அதுவே சமூக நீதி இந்த படங்களில் எல்லாம் அதே ஜாதிகாரர்கள் நடித்தால் அது சமூக முன்னேற்றத்திற்கான போராளிகள் படம் என்று அதற்க்கு வளைத்து வலித்து, தேசிய விருதுகள் கொடுப்பார்கள். இதையே பிற ஜாதிக்காரர்கள் செய்தால் 'ஜாதி வெறி''. இது போன்ற விஷமத்தனமான சமூகத்தை பிரிக்கும் ஒற்றை சார்பு ''ஜாதி வெறி'' பிடித்த படங்களையும் அதை தூக்கி பிடிக்கும் வேசி ஊடகங்களையும்,அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் சினிமா புரட்டு கூட்டத்தையும் ஒதுக்கி விட்டாலே இவர்கள் விரைவில் ஒழிந்து விடுவார்கள் எதனை நாளைக்கு தான் ஓடாத படங்களை காட்டி கருப்புப்பணத்தை வெளுத்து தரும் பினாமி வண்ணான் வேஷம் போடா முடியும் இவர்களால்??

 • பரி ஏறிய பெருமாள் -

  படம் நன்றாக உள்ளது...ஆனால் என்னுடைய கருத்து முடிந்த போன, காலப்போக்கில் மறைந்து கொண்டிருக்கிற விசயத்தை மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் திரும்ப திரும்ப எடுப்பதன் மூலம் தவறான தூண்டுதலுக்கு வழிவகுக்கும் என்பதே என் கருத்து...இந்த மாதிரி எடுப்பதற்கு பதில் பிற்படுத்த்பட்டோர் சலுகை முறைகளை நிராகரித்து முயற்சி மற்றும் திறமையின் அடிப்படையில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று படம் எடுத்தால் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்... திறமை அடிப்படையில் முன்னேறினால் தான் அனைவரும் சமம் என்கிற எண்ணம் முழுமை பெறும்...

  • Paraman - Madras

   என்னாது பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளை நிராகரிக்கோனுமா?? கொல்லைபுறவழியாக வந்து அடுத்தவன் மேல பழி போட்டு நோகாம நோம்பி கும்பிட்டு, 2000.வருஷமா பிற்படுத்தப்பட்டோம் என்ற பொய்யை வைத்து 70.+ வருஷமா உழைப்பின்றி ஓசி சோறு சாப்பிடுவதில் சுகம் உங்களுக்கு எப்பிடி தெரியும்?? அதெற்கெல்லாம் சான்ஸ் இல்லை ராசா

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  நடந்து முடிந்த ஒன்றை கதையாக்குவதால் எந்த பிற யோஜனமும் இல்லை. தமிழ் நாட்டை மூன்று நான்கு ஜாதிகளை சேர்ந்தவர்களையே எம்எல்ஏ ,எம்பி என்று ஆக்கி மந்திரி முதல் ,உயர் போஸ்டுகள் வரை அவர்களுக்கே கொடுக்கப்படுகின்றன.கக்கன் அவர்களை மிக பொறுப்பான துறையான போலீஸ் துறைக்கே மந்திரியாகப் போட்டவர் முதல்வராய் இருந்த காமராஜர்.ஆனால் அரசியலுக்காக தலித் முருகன் போன்றவர்களை தலைவராக்குகிறார்கள்.இது நகைச்சுவை இல்லையா? சினிமாக்கள் -சாதிப்பிரச்சினை, பணத்துக்காக காதல் ,போன்றவற்றை நேர்மையான கண்ணோட்டத்துடன் அணுகவேண்டுமே அன்றி எடுத்தேன்,கவிழ்த்தேன் போன்றவை மூலம் அணுக கூடாது.

 • Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  யாரும் இப்ப ஜாதிய அவ்வளவா பாக்குறதில்ல.. ஆனா இவனுவ ஜாதிய வச்சி படமெடுத்து மறுபடியும் ஜாதிய பூதமாக்குறானுவ.. இவனுவ கைல அருவாளை தூக்கிக்கினு செய்ற கருமாந்திரத்த விட பேசாம யோகி பாபு நடிச்ச மண்டேலா படத்த பாருங்க.. கொஞ்சம் ஜாலியா சிரிசிக்கலாம்..

 • gopu -

  In Mahabhratam, Karnan is not from discriminated society, He was not fought for them also.. Karna fought only for himself Krishna didnt do any discriminate.. people around Dhuriyodana like Dronacharya, Bhishma, Saguni,.., discriminate Karna Director should have avoided touching Mahabharata if he didnt understand the Epic. Discrimination is Sin, no second thought.

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  இனி தனுஷ் படம் என்றால் தாழ்ந்துவிட்டோர் எல்லோரும் அருமையான மக்கள், அவர்களை மற்றவர்கள் கொடுமை படுத்துவார்கள், பிறகு ஒரு இளைஞன் வந்து அவர்களுக்காக போராடி விடுவிப்பான் என்பதுதான் கதையாக இருக்கும் போல. படம் எடுக்கும் செலவும் குறைவு, யாரும் மோசமாக விமரிசனம் செய்ய மாட்டார்கள், லாபமும் அதிகம். போதாததற்கு விருதுகளும் கிடைக்கும்.

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  மொக்கை

 • Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா

  இந்த சினிமாவே சாதியத்தை வளர்க்கின்றது என்றால் மறுப்பதற்கு இல்லை .கேடுகெட்ட தமிழ் இயக்குனர்கள் . இது போன்ற படங்களை மக்கள் புறம் தள்ள வேண்டும் .

 • srinivasan - newyork,யூ.எஸ்.ஏ

  நான் படம் பார்க்கவில்லை விமர்சனங்களை வைத்து பார்க்கும்போது குமுதம் இதழில் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கதை போட்டியில் வென்ற அழகாபுரி அழகப்பன் எழுதிய கதை.நாயகன் ஒரு கிராமத்திற்கு பேருந்தை வரவழைக்க படும் பாடுகளும், இறுதியில் தன உயிரை இழந்து அதில் வெற்றி பெரும் கதை.

  • நந்தினி, ஈரோடு - ,

   network போனபின்னரும் இங்கிதம் தெரியவில்லையே.. ஒரு புதுப்படத்தை பற்றி பதிவிடும்போது spoiler இல்லாமல் எழுதுவதுதான் படித்தவன் இயல்பு. அது சாருக்கு இல்லாததது அசிங்கம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement