Advertisement

பிகில்

நடிப்பு - விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், கதிர் மற்றும் பலர்....
இயக்கம் - அட்லீ
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
தயாரிப்பு - எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியான தேதி - 25 அக்டோபர் 2019
நேரம் - 2 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டை மையமாக வைத்து படங்கள் வருவது ஒரு டிரெண்ட் ஆக உள்ளது. அந்த டிரெண்டில் ஒரு விளையாட்டு ஆடிப் பார்ப்போமா என விஜய்யும், இயக்குனர் அட்லீயும் ஆடிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஆட்டம் சரியாக அமைந்ததா என்பதுதான் கேள்வியே.

தமிழில் இதற்கு முன் வந்த படங்களைத் தழுவித்தான் அட்லீ அவருடைய 'ராஜா ராணி, தெறி, மெர்சல்' ஆகிய படங்களை எடுத்ததாக குற்றச்சாட்டு உண்டு. அதனால், இந்த 'பிகில்' படத்தை ஒரு படத்தை மையமாக வைத்து எடுத்தால்தானே குற்றம் சொல்வார்கள் என பல படங்களை மையமாக வைத்து 'பிகில்'- ஊதியிருக்கிறார்.

'இறுதிச்சுற்று, ஜீவா, கனா, நட்பே துணை, கென்னடி கிளப்' ஏன் 'விஸ்வாசம்' படத்தின் சில காட்சிகள் கூட 'பிகில்'ஐப் பார்க்கும் போது ஞாபகத்தில் வந்து போகின்றன.

அட்லீ இயக்குனரான பின் தமிழ்ப் படங்களை அதிகம் பார்ப்பதில்லை என்பது இதிலிருந்தே புரிகிறது. ஒரு கட்டத்தில் தியேட்டரில் பொறுமை இழந்து சிலர் வெறுப்பில் கூச்சலிடுவதும் விஜய் படத்தில் நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

டில்லிக்குச் செல்லும் வழியில் தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணியினர் சென்னை வருகிறார்கள். அவர்களின் கோச் ஆன கதிர்-ஐ கொல்ல முயற்சி நடக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக தாதாவான விஜய் கோச் ஆக நியமிக்கப்படுகிறார். ஒரு தாதா, ரவுடி தங்களுக்கு கோச்சா என பெண்கள் ஆவேசப்படுகிறார்கள். தாதா விஜய் யார், அவர் ஏன் ரவுடி ஆனார், இப்போது ஏன் கோச் ஆனார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பா ராயப்பன், மகன் மைக்கேல் என விஜய் இரண்டு வேடங்களில் வருகிறார். அப்பா ராயப்பன் கதாபாத்திரத்திற்கு முடிந்தவரையில் வயதான தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக கொஞ்சம் கரகர குரலில் தளர்வாகப் பேசுகிறார் விஜய். ஆனால், இறங்கி செய்ய வேண்டும் என்றால் ஒரே ஆளாக ஐம்பது பேரை வெட்டி சாய்க்கிறார். இந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது கமல்ஹாசனின் 'நாயகன்' வேலு நாயக்கர் வந்து, தோற்றத்தில் மட்டும் 'லேசாக' ஞாபகத்திற்கு வந்து போகிறார்.

மகன் மைக்கேல் தான் பிகில். அவர் பிளாஷ்பேக்கில் கால்பந்து வீரராக இருக்கும் போது பிகில். தாதாவாக இருக்கும் போது மைக்கேல். 'பிகில்' ஆக அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக, நம்பர் 1 கால்பந்து வீரராக அமைதியாக இருக்கிறார். அப்பாவை அவர் கண்முன் கொன்ற அடுத்த வினாடியே தாதா மைக்கேல் ஆக மாறிவிடுகிறார். கோச் ஆன பின் தாதா மைக்கேலை கொஞ்சம் மறந்துவிட்டு கோட் மாட்டிய கோச் ஆக மாறிவிடுகிறார். ஆனாலும் விட்ட குறை தொட்ட குறையாக திடீர் திடீரென தன் தாதா வேலையைக் காட்டுகிறார்.

'சைரா' படத்தில் வந்து போனது போலவே இந்தப் படத்திலும் நயன்தாரா வந்து போகிறார். சில காட்சிகளில் வந்து விஜய்யைக் காதலிக்கிறார். அப்புறம் ஒரு பாடல் பாடுகிறார், பின்னர் பிசியோதெரப்பிஸ்ட்டாக கூடவே இருக்கிறார். விஜய், நயன்தாரா டூயட் வரும் போது தியேட்டரில் பாதி பேர் எழுந்து வெளியே போய் விடுகிறார்கள்.

யோகிபாபு மட்டும் ஒரு ஐந்தாறு முறை சிரிக்க வைக்கிறார். ஆனந்தராஜ், விஜய் கூடவே இருக்கிறார். எந்த காட்சியிலாவது வசனம் பேசினாரா என்பதுதான் தெரியவில்லை.

அப்பா ராயப்பன் விஜய்க்கு வில்லன் ஐ.எம்.விஜயன். எந்த வசனமும் போசாமல் இரண்டு முறை விஜய்யை முறைத்துவிட்டு, மகன் விஜய்யால் கொல்லப்பட்டு அவர் வில்லத்தனத்தை முடித்துக் கொள்கிறார். மகன் விஜய்க்கு வில்லன் ஜாக்கி ஷெராப். அவரை ஜட்டியுடன் மட்டுமே இருக்க வைத்து கொடுமைப்படுத்துவதெல்லாம் ரொம்ப ஓவர். இவரும் கடமைக்கு நான்கைந்து வில்லத்தனமான வசனங்களைப் பேசி தன் பங்கை முடித்துக் கொள்கிறார். இவரது கதாபாத்திரப் பெயர் சர்மா. யோசிப்பவர்களுக்குக் காரணம் புரியும். டேனியில் பாலாஜியும் படத்தில் மூன்றாவது வில்லன். அவருக்கு ஒரு மூன்று காட்சிகள்.

பெண்கள் கால்பந்து அணியில் இந்திரஜா, ரெபா மோனிக்கா ஜான், அம்ரிதா என ஓரளவிற்குத் தெரிந்த முகங்கள். கிராபிக்ஸ் புண்ணியத்தில் அவர்களை சிறந்த கால்பந்து வீராங்கனைகளாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கோச்சாக கதிர். விஜய்யின் தம்பி போல வந்து கொஞ்சம் சென்டிமென்ட்டைக் கூட்டுகிறார்.

ஒரு காட்சியில் அழுவதெற்கென்றே ரோகிணி, தம்பி என ஒரு காட்சியில் வசனம் பேசிய தேவதர்ஷினி என, ஒரு காட்சி, ஒரு வசனம் என சிலர் வந்து போகிறார்கள். இடைவேளைக்குப் பின் டீம் மேனேஜராக விவேக். சில மொக்கை ஜோக்குகளை சொல்லி அவரே சிரித்துக் கொள்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வெறித்தனம், சிங்கப் பெண்ணே' பாடல்கள் மட்டும் ரசிக்கும் ரகம். பின்னணி இசையில் பில்ட்-அப் சமாச்சாராங்கள் எதுவும் இல்லை. ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு கால்பந்தாட்டக் காட்சிகளை விதவிதமாக எடுத்துத் தள்ளியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

இடைவேளை என்னமோ ஏதோ என்றே காட்சிகள் நகர்கின்றன. இரண்டு வேட விஜய்யை மூன்று கதாபாத்திரங்களாகக் காட்டுவதற்கு சில பில்ட்-அப் காட்சிகள். அப்பா விஜய்க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவருக்கும் சில காட்சிகள் என இலக்கில்லாமல் திரைக்கதை நகர்கிறது.

இடைவேளைக்குப் பின் 'கனா, கென்னடி கிளப்' படத்தின் மற்றொரு வெர்ஷனாக மட்டுமே படம் தெரிகிறது. விஜய்யின் ரசிகர்களைத் திருப்பதிப்படுத்த சில ஹீரோயிசக் காட்சிகள், சில பன்ச் வசனங்கள். மற்றபடி அட்லீ, விஜய் கூட்டணியில் வெளிவந்த 'தெறி, மெர்சல்' அளவிற்கு இந்தப் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம்தான்.

எந்த தடைகள் வந்தாலும் அதை தகர்த்து லட்சியத்தை அடைய பெண்கள் தன்னம்பிக்கை உடன் போராட வேண்டும். இது தான் படத்தின் மைய கரு. ஆனால், அது விஜய் என்ற ஹீரோயிச பார்முலாவிற்குள் அடங்கி போய் விடுகிறது. அப்பாவின் கனவையும், ஏழை பெண்களின் கனவையும் தான் சார்ந்த மக்களின் கனவையும் காப்பாற்ற துடிக்கும் ஹீரோ விஜய்யை இன்னும் அழுத்தமாக நம் மனதிற்குள் பதிய வைத்திருக்கலாம்.

'பிகில்' - கேக்கலை... கேக்கலை... சத்தமா...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • swega - Dindigul,இந்தியா

  இவரு டான்ஸ் ஸ்டில்ஸ் பாத்தா ரொம்ப காமெடியா இருக்குது. எதோ வலிப்பு வந்தவரை போல கை காலை உதறுறாரு

 • R Balasubramanian - Pune,இந்தியா

  அதான் ஒரு பத்திரிகையிலே வந்ததே.... சந்தடி சாக்குல ஊசிய ஏத்துவானுங்க... எல்லாம் பணப் பரிமாற்றம், வியாபாரம் தான். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் அந்த கடவுள்தான் இந்த வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். ஜெய் ஸ்ரீராம்

 • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

  படம் பார்த்தேன் ஒரு முறை பார்க்கலாம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிற படமல்ல.. எனக்கு எப்போவுமே திரு. ரஹ்மான் அவர்களின் இசை பிடிக்காது பாடல்களை விட ஒரு கொண்டாட்ட இசை ஒன்று வரும் அது சூப்பர் அதுமட்டும்தான் சூப்பர்..

 • Charcoal Phiri - Lusaka,ஜாம்பியா

  The movie Bigil minted more than 300 crores and beaten several records all over the world. We as a family enjoyed the movie and experienced many people in the theater enjoyed. To day I read your review of the movie and was disappointed terribly. It is not a genuine review and seems to be you have already received money from ADMK and wrote the rubbish as if you are very cleaver but you are not and you are zero in your head. Do not write comment for other movies even they are done by other actors and directors. Don't make other people to spit on you,

 • Anand Shanmugam -

  I saw Bigil movie yesterday. Vijays acting for a change was good Vs his heroic moments in the past films particularly as a coach where he was rejected by team players of food ball. Vijay as father character was very good in emotions with son Vijay. But, other characters are given less importance. First half little slow and second half was fast. Could have chosen coach role with in depth food ball tricks. BGM was good. Two songs are OK. Vijay should come out of fighting 50 people at a time. You can watch definitely for female empowerment which could have discribed better.

 • HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ

  .. நான் விஜய் ரசிகன் அல்ல, ஆனால் படம் "பலரும் சொல்வதைப்போல" அவ்வளவு மோசமும் அல்ல.. பெண்கள் வலிமை பற்றிய (ஏதோ) ஒரு கதையில், தனது மாஸை குறைத்து, நடித்ததற்காக விஜய்-யை கண்டிப்பாக பாராட்டுகிறேன்.. முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நன்றாக இருந்தது.. வீக்கான "அப்பா விஜய்" ரோல், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தீர்த்திருக்காது.. காமெடி ரொம்ப குறைவு.. உனக்காக டூயட் பாடல் மனதில் நிற்கவில்லை.. "சிங்கப்பெண்ணே" பாடல் சூப்பர்.. இரு பாடல்களிலும் "சிகப்பு" வண்ண தீம் நன்றாக படமாக்கப்பட்டு இருந்தது.. அட்லீ திரைக்கதையில் கவனம் செலுத்த தொடங்கவேண்டும்.. ஓரிரு நாட்களில் இரு குடும்பத்து சிக்கல்/பிரச்சனைகளை தீர்ப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.. படத்தை விரும்பாதவர்கள், அட்லீயை தான் கழுவி ஊற்றவேண்டுமேயன்றி, விஜயை அல்ல..

 • karavaraya -

  ka ka po

 • Amirthaa Dresses -

  அட்லீ இயக்கத்தில் மற்றுமொரு அவியல். கதை சுட்டது

 • Amirthaa Dresses -

  அட்லீ இயக்கத்தில் மற்றொரு மசாலா mixing from various movies ..he never own any stories ...he has to pay Royalties...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement