Advertisement

ஆடை

நடிப்பு - அமலா பால், விவேக் பிரசன்னா மற்றும் பலர்
தயாரிப்பு - வி ஸ்டுடியோஸ்
இயக்கம் - ரத்னகுமார்
இசை - பிரதீப் குமார்
வெளியான தேதி - 19 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

கால மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களும், காலத்திற்கேற்ப படங்களைக் கொடுப்பவர்களும்தான் திரையுலகத்தில் கவனிக்கப்படுகிறார்கள். தன்னுடைய முதல் படமான மேயாத மான் படத்திலேயே கவனிக்கப்பட்டவர் இயக்குனர் ரத்னகுமார். அவரது இரண்டாவது படமான ஆடை படம் மூலமும் கவனத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

டீசர், டிரைலர்களைப் பார்த்தவர்கள் நிர்வாண கோலத்தில் அமலாபால் நடித்திருக்கிறார் என பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்தக் காட்சி படத்தில் எப்படி, எந்த சூழ்நிலையில் வரப் போகிறது என்ற பதைபதைப்பும் வந்தது. ஆனால், அதை முகம் சுளிக்காத வகையில் ஒளிப்பதிவாளர் துணையுடன் மிக மிக கவனமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

பெமினிஸம் பேசிக் கொண்டு தங்களை மாடர்ன் பெண்களாக வெளிப்படுத்தி சில தவறுகளைச் செய்யும் சில பெண்களை, அவர்கள் வயதுடைய மற்றொரு பெண்ணை வைத்தே திருந்தச் செய்வது சிறப்பு. இருந்தாலும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கடைசியில் அட்வைஸ் செய்வது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. இருப்பினும் பிரான்க் ஷோ என்ற பெயரில் சில டிவிக்களில், சில யுடியூப் சேனல்களில் நடக்கும் கேலிக்கூத்தை கடுமையாகச் சாடியிருக்கிறது படம். இந்த ஆடை பார்த்து அவர்கள் திருந்துவார்கள் என்றால் மகிழ்ச்சியே.

டிவி சேனலில் வேலை பார்ப்பவர் அமலா பால். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைக்கும் இந்தக் காலத்தில் இருக்கும் சில பெண்களின் குணம் கொண்டவர். டிவியில் பிரான்க் ஷோ நடத்துபவர். அவருடைய பிறந்த நாளன்று ஆண் நண்பர்களுடனும், தோழியுடனும் சேர்ந்து காலி செய்யப்பட்ட அலுவலகத்தில் குடிக்கிறார். சேனலில் செய்தி வாசிக்கும் ரம்யாவிடம் ஆடையே இல்லாமல் செய்தி வாசிப்பேன் என சவால் விட்டு தோற்றுப் போகிறார் அமலா பால். அதனால், குடிக்கும் போது ஆடைகளை கழற்றிப் பேசி கிண்டலடிக்கிறார். போதை உச்சத்திற்கு ஏறுகிறது. விடிந்து பார்த்தால் ஆடை இல்லாமல் நிர்வாண கோலத்தில் அந்த பில்டிங்கில் அமலா பால் மட்டுமே இருக்கிறார். நண்பர்கள் யாருமே கூட இல்லை. அந்த நிலையில் அவர் எப்படி அந்த பில்டிங்கை விட்டு வெளியேறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இப்படி ஒரு துணிச்சலான (?) கதாபாத்திரத்தில் நிர்வாண கோலத்தில் ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த நடிகையாவது நடிக்கத் துணிந்திருப்பாரா என்பது ஆச்சரியமே. இடைவேளைக்குப் பின் படம் முடிவது வரை அமலா பால் படத்தில் ஆடையே இல்லாமல் அந்த காலி பில்டிங்கில் சுற்றிச் சுற்றி வந்து தப்பிக்கப் பார்க்கிறார். கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அந்த நிலையில் ஒரு பெண்ணின் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை அமலா பால் காட்டியிருப்பது இயல்பாக உள்ளது. சுதந்திர கொடி என்கிற காமினி கதாபாத்திரத்தில் அப்படியே செட் ஆகியிருக்கிறார் அமலா பால்.

படம் முழுவதும் அவரைச் சுற்றியேதான் வருகிறது. மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய வேலையில்லை. அமலா பாலை ஒருதலையாகக் காதலிக்கும் சுகுமார் என்ற கதாபாத்திரம், கேமராமேனாக இருக்கும் கௌரி (விவேக் பிரசன்னா) கதாபாத்திரம் தான் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக புடவையில் பாந்தமாய் குடும்பப் பெண்ணாய் காட்சி தரும் ரம்யா, அமலா பால் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து அதிர்ச்சி அளிக்கிறார்.

இன்றைய காலத்தில் இளைஞர்களும், இளைஞிகளும் எப்படி இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே, கொஞ்சம் பச்சையான வசனங்களுடன் வெளிப்படுத்துகிறார் இயக்குனர். படத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. கதாநாயகியை ஒரு மணி நேரம் நிர்வாண கோலத்தில் காட்டுபவர்களிடம் அதை எதிர்பார்ப்பதும் தவறு.

ஆரம்பம் முதல் கடைசி வரை இருக்கும் வெளிப்படைத் தன்மைக்கு பிராயச்சித்தமாய் இந்தக் காலப் பெண்கள் எப்படி இருக்கிறார், எப்படி இருக்க வேண்டும் என அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தை வைத்து முடித்திருக்கிறார் இயக்குனர். அந்தப் பெண் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் தியேட்டரில் கைத்தட்டல் கிடைக்கிறது.

பின்னணி இசையில் தன் இருப்பை சரியாகக் காட்டுகிறார் இசையமைப்பாளர் பிரதீப் குமார். இடைவேளைக்குப் பின் அமலா பால் நிர்வாண கோலத்தை எந்த ஆபாசக் கோணத்திலும் காட்டாத அளவிற்கு பார்த்துப் பார்த்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் கார்த்திக் கண்ணன்.

இடைவேளைக்குப் பின் யாருமேயில்லாத, அந்த காலி அலுவலகத்தில் அமலா பால் சுற்றி சுற்றி வரும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அந்த இடத்திலிருந்து திரைக்கதை நகர மறுக்கிறது. சில லாஜிக் கேள்விகளும் ஆங்காங்கே எழுகின்றன. நம் கூட இருப்பவர்களிடம் ஏமாற்றி விளையாடுவதுதான் பிரான்க், யாரென்று தெரியாதவர்களிடம் விளையாடுவது பிரான்க் அல்ல என்ற வசனம் நச்.

ஆடை - அவசியம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • ஃப்ளாஷ் -

  ஆடை அடுத்த சமூகத்தின் விடை

 • Vasanth - Chennai,இந்தியா

  சமூக பொறுப்பு இல்லையா?

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   சமூக பொறுப்பு என்பது நடிகரை பற்றிய வரலாறை மாணவர்கள் படிக்கும் பள்ளி படத்தில் சேர்ப்பது?? என்ன சரியா வசந்த்.

  • Vasanth - Chennai,இந்தியா

   என்னுடைய அனைத்து பதிவுகளையும் பாருங்கள் உங்கள் கேள்விக்கு விடை தெரியும்.

  • Vasanth - Chennai,இந்தியா

   அடுத்தவர் தகுதி பற்றி பேசுகிறீர்கள்.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  மீ டூ வை காரணம் காட்டி பிடிக்காத ஆண்களின் மீது போலி வழக்குகள் போட்டவர்கள் இப்போது தைரியமாக ஆடை இல்லாமல் திரைப்படத்தில் நடிக்க வந்திருக்கிறார்கள் . படம் நூறு நாட்கள் ஓடினால் வெற்றி விழா மேடையிலும் ஆடை இல்லாமல் தோன்றுவார்கள் போல

 • Vasanth - Chennai,இந்தியா

  நிர்வாணமாக காட்டி திருத்த பார்ப்பது என்பது சமுதாயத்தில் ட்ரெண்டில் இருக்கும் விஷயத்தை சாதகமாக மாற்றி சம்பாரிப்பது என்றாகிவிட்டது. இதில் சற்றும் பொதுநலம் இல்லை. இத்தனை பேர் பார்க்கிறார்கள், இத்தனை ஆதரவு என்பதெல்லாம் சமுதாயம் கெட்டு விட்டது என்பதின் அடையாளம். நிறைய பேர் இது விழிப்புணர்வு என்றோ, தைரியம் என்றோ, முன்னேற்றம் என்றோ பலவாறாக கூறலாம். ஆனால், நாளடைவில் இதே செயலை பல இளம் பெண்களும் tiktok, instagram, etc... ஆபாச செல்ஃபி வீடியோ போன்று செய்து காட்டும் நிலை நாட்டில் உருவாகும். கெட்ட விஷயங்கள் ஆரம்பத்தில் அச்சுறுத்தாது. அதன் விளைவு மோசமான நிலைக்கு இட்டு செல்வது உறுதி. இத்தகைய படங்களுக்கு ஆதரிப்பவர்களின் வீட்டு பெண்கள் செய்யாத வரையில் அடுத்த வீட்டு பெண்கள் செய்வதை பாராட்டுவார்கள். வெளிநாட்டு பெண்களின் தைரியம் என்பது பல ஆபத்துகள் இருந்தும் காவல் துறையில் அதுவும் மிக ஆபத்தான போதை கடத்தல் பிரிவில் பணி புரிவது, விமான ஓட்டிகளாக, மேலாண்மை துறையில், மருத்துவராக, சுயமாக நிறுவனங்கள் cake, decorators, rental house communicator, etc... , பெண்களை மதிக்க வேண்டும் என்று wonder women, cat women, supergirl, black widow, batgirl, Harley Quinn போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கி ஸ்கர்லெட் ஜான்சன், ஹேலிபரி, ஜெனிபர் கார்னர், ஆலிஸ்யா ஸில்வர்ஸ்டோன், லின்டா கார்டர், etc.... போன்ற பல நடிகைகள் கம்பீரமாக பெண்மைக்கு மதிப்பையும், பெருமையையும் சேர்கிறார்கள். ஆனால், இங்கு “BOLD” எனப்படுவது ஒரு பெண் மேலாடை அணியாமலோ, புகை பிடிப்பதையோ, மது அருந்துவதையோ, கெட்ட வார்த்தை பேசினாலோ, செய்தால் பாராட்ட பயன்படுத்தும் வார்த்தை. அன்றாடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடூர குற்றங்களுக்கு இத்தகைய நடிகைகளும், படங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் ஒரு வகையில் காரணம். சமீபத்தில் வெளியான “100” படம் இன்றைய இளைய தலைமுறை எந்த அளவுக்கு கொடூரமாக உள்ளார்கள் என்பதற்கு சரியான உதாரணம். பெண்களை கவர்ச்சியாக, ஆபாசமாக பயன்படுத்தி நடத்தப்படும் காதலிக்க நேரமில்லை, பிக் பாஸ், சகலை vs ரகளை, etc...... போன்ற நிகழ்ச்சிகளை, படங்களை வீட்டில் குடும்பத்தோடு பார்ப்பதை நிறுத்தினால் மட்டுமே கொடூர குற்றங்கள் குறையும். தட்டி கேட்க எண்ணம் தோன்றும்.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   மேற்கூறிய அனைத்து ஹாலிவுட் நடிகைகளும் ஒட்டு துணியில்லாமல் நடித்த காட்சிகளை இன்னும் காணவில்லையா ?? வசந்த்.

  • Vasanth - Chennai,இந்தியா

   அந்த நடிகைகள் "அறியப்பட்டது, புகழ் பெற்றது" அனைத்தும், இத்தகைய பெண்களுக்கு "மதிப்பும், கம்பீரமும்" கிடைக்கும் வண்ணம் நடித்த படங்களால் மட்டுமே. நீங்கள் கூறிய காட்சிகள் அந்தரங்கமாக பார்ப்பது. அனைத்து படங்களிலும் அப்படி இருக்காது. அவற்றில் பல போலிகளும் அடங்கும். தவிரவும் நீங்கள் கூறிய காட்சிகள் இடைப்பட்ட காலங்களில்தான் வெளிப்படையாக இருந்தன. அன்றைய காலங்களின் முன்புவரை பெண்கள் போக பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டார்கள். அந்த கால கட்டத்தில்தான் பெண்கள் வீறு கொண்டு அந்நிலையிலிருந்து வெளி வர ஆரம்பித்தனர். Supergirl , Wonderwomen போன்ற கதாபாத்திரங்கள் அவர்களுக்கு பெரிய வூக்குவிக்கும் சக்தியாக வீறுகொண்டு எழ பெரும் தூண்டுகோலாக அமைந்தது. உங்களுக்கு ஹாலிவூட் படங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ....அங்கு குழந்தைகளுக்கான படம் என்றால் மிக மழலைத்தன்மையுடன் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு உரியதாக மட்டுமே இருக்கும். வில்லன், வில்லி பாத்திரங்கள் கூட குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் இருக்கும் (Richie Rich , pacifier , Home Alone , The Spy Next Door ....) ... விலங்குகளுக்கான படம் என்றால் அவைகளுக்கான தன்மை மாறாமல் அதே சமயம் புத்திசாலித்தனமாக "லாஜிக்கோடு" செண்டிமெண்ட் கலந்து அவைகளை துன்புறுத்த கூடாது என்ற எண்ணம் வரும் வகையில் இருக்கும் ( A Dog’s Dale , War Horse , Stuart little , Up .....). ஏன், அங்கு பிரமாண்டமான போர் காட்சி என்றாலும் அதில் பெரும்பாலும் எந்த குதிரைகளோ காலை வாரிவிட்டு விழ வைக்கமாட்டார்கள். அதில் சவாரி செய்யும் வீரர்கள் கீழே விழுமாறுதான் அமைப்பார்கள்..., குழந்தைகளுக்கு அன்னையாக வரும் பெண்கள் கதாபாத்திரம் மிகமிக பெருமை சேர்க்கும் விதத்தில் இருக்கும். அந்த அன்னை கதாபாத்திரங்கள் தன் குழந்தைகளுக்காக எந்த வலிகளையும் தாங்குவார்கள், தங்களையே அர்பணிப்பார்கள் ( Terms of earment , Little Man Tate , ஏன் புகழ்பெற்றபடத்தில் தன் பிள்ளைக்காக கடைசி வரை போராடும் தாயின் கதை Terminator 2: Judgment Day ...... ). பெரியர்வர்களுக்கான படம் என்றால் அந்தந்த வயதில் தோன்றும் பிரச்சனையையை மையமாக வைத்து வரும் (angry management , Tootsie , Hitch , A Beautiful Mind. ...). இன்னும் பல. இத்தகைய படங்களை பற்றித்தான் கூறியிருக்கிறேன்...., "எதிர்க்குரல், சிங்கார சென்னை" நீங்கள் பார்க்கும் அந்த படங்களை வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து பார்க்க முடியுமா? ஆனால், ஆடை படம் வீட்டில் எல்லோரும் பார்த்தும், பாராட்டும் (தங்கள் வீட்டு பெண்கள் செய்யாமல், அடுத்த வீட்டு பெண்கள் செய்யும் வரை) அளவிற்கு முற்றிவிட்டது.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.ஆடை படம் வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் கூறிய அனைத்து படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் ஆபாசம் என்பது ஆடையில் அல்ல??? பார்ப்பவர் கண்களில் என்பதுதான் மேலை நாட்டாரின் தத்துவம் அது இங்கே நடவாது ஏனெனில் ஒரு சிலர் மட்டும் நாகரீகமடைந்தால் அது நாகரீக சமூகம் ஆகி விடாது. இங்கே ஆடை என்பதே எவ்வளவு பெரிய அரசியல் பிரச்சினை எனபதை யாவரும் அறிவர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement