Advertisement

காஞ்சனா 3

நடிப்பு - ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
இயக்கம் - ராகவா லாரன்ஸ்
இசை - தமன், டூபாடு
வெளியான தேதி - 19 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் பேய்ப் பட சீசனை வணிக ரீதியாக வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. முனி படத்தில் ஆரம்பமான அந்த சீசன் இப்போது முனி 4 - காஞ்சனா 3 வரை தொடர்கிறது.

காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் தந்த வரவேற்பில் காஞ்சனா 3 படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவா லாரன்ஸ். முதலிரண்டு பாகங்களைப் போலவே இந்த மூன்றாவது பாகமும் ஒரு பழி வாங்கும் கதைதான்.

முந்தைய படங்களில் இருந்த அதே பிளாஷ்பேக் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் உண்டு. இந்த முறை அனாதை ஆசிரமம், மாற்றுத்திறனாளிகள் ஆதரவு என இன்னும் அழுத்தமான பிளாஷ்பேக்கைக் கொடுத்திருக்கிறார் ராகவா.

தாத்தா, பாட்டியின் 60ம் கல்யாணத்திற்காக அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் மகள் என குடும்பத்தாருடன் கிளம்பி கோயம்பத்தூர் வருகிறார் ராகவா லாரன்ஸ். வந்த இடத்தில் தாத்தா வீட்டில் பேய் ஒன்று அனைவரையும் பயமுறுத்தி வருகிறது. அதை விரட்ட அகோரி ஒருவரின் உதவியை நாடுகிறார்கள். அவரும் பேய் போய்விட்டதாக பொய் சொல்லி ஏமாற்றுகிறார்ஆனால், பேய் அங்கிருந்து போகவில்லை. . அந்தப் பேய் ராகவா லாரன்ஸுக்குள் புகுந்து கொள்கிறது. மீண்டும் வரும் அகோரி, அந்த வீட்டிற்குள் இருப்பது பேய் அல்ல, இரண்டு பேய்கள் என உண்மையைச் சொல்கிறார். பிளாஷ் பேக் என்ன, ராகவா லாரன்ஸிடமிருந்து அந்தப் பேய்கள் எப்படி வெளியேறுகின்றன என்பதுதான் இந்த காஞ்சனா 3 படத்தின் கதை.

ராகவா லாரன்ஸ் வழக்கம் போல போய்களுக்குப் பயந்து நடுங்குபவராக நடித்திருக்கிறார். பிளாஷ் பேக்கில் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் அனாதை ஆசிரமத்திற்கும், பகுதி குப்பத்து மக்களுக்கு ஆதரவாக இருக்கும் காளி ஆக அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்ற காட்சிகளில் வழக்கம் போல நடித்தாலும் பேய் புகுந்து கொண்ட பின் ஒரே சமயத்தில் ஆங்கிலம் பேசும் பெண் பேயையும், காளி பேயையும் மாற்றி மாற்றி தன் நடிப்பில் காட்டுவதில் தியேட்டரில் கைத்தட்டல் அதிகம் ஒலிக்கிறது.

ராகவா லாரன்ஸைக் காதலிக்கும் மூன்று முறைப் பெண்களாக ஓவியா, வேதிகா, நிக்கி டாம்போலி. அரை குறை ஆடைகளுடன் ராகவா மேல் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். ராகவாவை சில காட்சிகளில் காதலிப்பது, சில காட்சிகளில் பேயைப் பார்த்து பயப்படுவது என மூன்று ஹீரோயின்களின் வேலை முடிந்து விடுகிறது. பிளாஷ்பேக்கில் ராகவாவுக்கு ஜோடியாக வரும் அந்த வெள்ளைக்காரப் பெண்ணை கிளாமர் காட்டாமல் நடிக்க வைத்திருப்பது ஆச்சரியம்.

தன் படங்களை சிறுவர்கள், சிறுமியர்கள் பலர் பார்க்கிறார்கள் என்பதை ராகவா கருத்தில் கொள்வது நல்லது. அதிலும் அவர்களை பிகர்கள் என அழைப்பது, அம்மாவே டாவடிக்க கூப்பிடுது போ என்பெதெல்லாம் ஓவரோ ஓவர். படத்தில் பெண்களை அவமதிக்கும் இம்மாதிரியான வசனங்களை இனிமேலும் வைக்காதீர்கள்.

காஞ்சனா முதல் பாகத்தில் வெற்றிகரமான நகைச்சுவைக் கூட்டணியாக அமைந்த கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் கூட்டணியை மீண்டும் இந்த மூன்றாம் பாகத்தில் கொண்டு வந்திருக்கிறார். அது முதல் பாகத்தைப் போலவே நன்றாக வொர்க்-அவுட் ஆகும். தியேட்டரில் இவர்களின் நகைச்சுவையை கைதட்டி ரசிக்கிறார்கள்.

வில்லன்களாக தருண் அரோரா, கபீர் சிங். முதலாமவர் அமைச்சர், இரண்டாமவர் அவரது தம்பி. இருவரும் பிளாஷ்பேக் ராகவாவை எதிர்ப்பவர்கள். ராகவாவை மிரட்டிப் பார்க்கும் போலீஸ் அதிகாரியாக அஜய் கோஷ். ராகவாவின் அம்மாவாக அனுபமா குமார். படத்தில் சூரியும் இருக்கிறார்.

பாடல்களை நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் டூபாடூவிலிருந்து தேர்வு செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை தமன். தெலுங்குப் படங்களுக்கு அதிகமாக இசையமைப்பவர் அதே பாணியில் இதிலும் இசையமைத்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் மிகச் சுமார் ரகம்.

வழக்கம் போல பேய்ப் படங்களில் எந்த லாஜிக்கையும் பார்க்க முடியாது, இந்தப் படத்தையும் அப்படியே இரண்டரை மணி நேரம், கொஞ்சம் பயந்து, கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் அழுது ரசித்துவிட்டு வரலாம். ஆனால், பெரிதாகச் சொல்லும்படி ஒன்றுமில்லை என்பதுதான் குறை.

காஞ்சனா 3 - காமெடியும், பேயும் மீண்டும் காப்பாற்றும்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • R S BALA - Chennai,இந்தியா

  வேற கதையே கிடைக்கலையா லாரன்ஸ் ...

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  இங்கே மொக்கை, குப்பை, கன்டராவதி, ஒரே கதை, அரைச்சமாவுன்னு கருத்து சொன்ன அத்தனைபேரும் படத்தை பாத்துட்டுவந்து கருத்து சொல்லறமாதிரி தெரியுது....நீங்க ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் நாங்களே படத்தை பாத்துட்டு முடிவு பண்ணிக்கிறோம்ம்ன்னு மக்கள் நினைக்கிறாங்க போல..அதுனாலதான் இவளவு வசூல்...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...இதுல படம் மொக்கையா இருந்த என்ன? குப்பையா இருந்த என்ன? கன்றாவதியா இருந்தையென்ன ? இதுலே இருந்து எனக்கு ஒரு கேள்வி மனசில் வருது , என்ன தான் உலக தரமான படமாயிருந்தாலும் ஆயிரம் கருது கந்தசாமிங்கள் உங்க படத்தில இருந்தாலும், உள்ளூர் ரசிகனை திருப்தி படுத்ததா நீங்க உலகத்தரமான படம் எதைவச்சு சொல்றீங்க இல்ல யாருக்குத்தான் இந்த படங்களை எடுக்குறீங்க? உலகத்தரமான படம் தமிழ்நாட்டை தவிர அப்புடியா? கமலின் மருத நாயகத்துக்கு உங்க படத்துக்கும் ஒரு வித்தியாசம் இல்லை...மருத நாயகத்தை பாக்கவே முடியாது அதே மாதிரி உலகத்தரமான உங்கப்படத்தையும் பாக்கவே முடியாது..என்னமாதிரி கடேசி பெஞ்சுல உட்காந்திருக்கறவனுக்கும் புரியறமாதிரி பாடம் எடுங்க...முதல் பெஞ்சை மட்டும் நம்பி பாடம் எடுத்தா எப்புடி?...சி சென்டெர்க்காரனை மனசுல வச்சுக்கங்க...ரிப்பீட்டட் ஆடியன்ஸ் அவன் மற்றும் அவன் குடும்பம் மட்டுமே ....முதல் பெஞ்சுக்காரன் ஒருதடைவைக்குமேல படத்தை பாக்கமாட்டானுங்க... .காஞ்சனாவின் வசூலில் இருந்து என்ன தெரியுது? கலைவாணர் NSK மற்றும் நடிகவேள் போன்றோர் இன்னமும் மக்கள் மனதில் இருக்க காரணம், கருத்துக்களை அப்பட்டமா போட்டு உடைக்காம மக்கள் ரசிக்கிற மாதிரி சொன்னதால..இங்கே ஹாரரை ஹாஸ்யமா சொன்னதால திரு லாரன்ஸ் ஜெயிச்சாரு.... காமெடியில் சொல்லாத கருத்துக்களையோ நீங்க உலகத்தரமான மொத்த படத்துலயும் சொல்லீடப்போறீங்க ? ..நீங்களும் ரசிக்கறமாதிரி கருத்தை சொல்லுங்க மக்கள் தலையில் வச்சு கொண்டாடுவாங்க...

 • karthik - coimbatore,இந்தியா

  அரைச்ச மாவையே மீண்டும் அரைத்து இருக்கிறார் ராகவா..

 • VASEEGARAN - BANGALORE,இந்தியா

  படம் ஆரம்பிச்சவுடன் குழந்தைங்களை வச்சு கதை சொல்ல சொல்றது, பொம்பளைங்க மடியில ஓடி வந்து ஏறி உட்கார்றது, பேயை கண்டா பயப்படறது, பொண்ணுங்கள டாவு அடிக்கிறது, இன்டெர்வல்க்கு முன்னாடி பேய் இருப்பதை கோவை சரளா, மனு, திவ்யதர்ஷினி வைச்சு கண்பார்ம் பண்றது, பேய்க்கு பிளாஷுபாக் ஸ்டோரி, பேய்க்கு ஹெல்ப் பண்றதுன்னு இன்னும் எத்தனை நாளைக்கு தாண் ஸீன் பை ஸீன் ஒரே கதையை வைப்ப லாரன்ஸ்?. இவன் பட கதை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு. என்ன அரவாணி பேய், நொண்டி பேய், அனாதை பேய்ன்னு படத்துக்கு படம் பேயை மட்டும் தான்பா இவன் மாத்தறான்.

 • Sasi Kumar -

  என்னதான் கமென்ட் போட்டாலும் 4 நாட்களில் திருப்பூரில் அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ் புல்

 • கிழவன் -

  சத்தியமா சொல்றேன் ... படம் படு குப்பை .. முன்று கதாநாயகிகள் இடுப்பில் ஏறி உட்காருவது காமெடியில்லை வக்ரம் .. பணம் வேஸ்ட் .....

 • thiru - Chennai,இந்தியா

  இந்த திரைப்படத்தை சன் பிக்செர்ஸ் வெளியீடு.. எந்த குப்பை படம் என்றாலும் விளம்பரம் பண்ணி படத்தை வெளியில படமாக்கி விடுவார்கள் .. அது ஒன்று தான் மாறுதல்..

 • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

  ராகவா லாரன்ஸ் அவர்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள் ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் அலுத்துவிடும் எனவே பேயிடமிருந்து விலகி மற்ற கதைகளையும் பண்ணவேண்டும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement