Advertisement

மீண்டும் ஒரு மரியாதை

நடிப்பு - பாரதிராஜா, நட்சத்திரா
தயாரிப்பு - மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம் - பாரதிராஜா
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
வெளியான தேதி - 21 பிப்ரவரி 2020
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இந்த மீண்டும் ஒரு மரியாதை படம் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே அவர் இயக்கிய படமா இது என அதிர்ச்சி தான் வருகிறது.

கிராமியப் படங்களையே அதிகம் இயக்கிய பாரதிராஜா, வெளிநாட்டு மண்ணைக் கதைக் களமாகக் கொண்டு இயக்கியுள்ள படம்தான் இது. படம் முழுவதும் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இருவரும் மாறி மாறிப் பேசியே நேரத்தையும் கொல்கிறார்கள். வாழ்ந்து முடித்த வயதான ஒருவருக்கும், வாழ ஆரம்பிக்கும் ஒரு இளம் பெண்ணிற்கும் இடையேயான நட்பு, அவர்களின் பயணம்தான் இந்தப் படம்.

லண்டனில் வசிக்கும் தனது மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர் பாரதிராஜா. அங்கு உடனிருந்து மறைந்த ஒருவரின் கடைசி கால ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறார். அப்போது தன் அக்கா கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் நட்சத்திராவைக் காப்பாற்றுகிறார் பாரதிராஜா. பத்து நாள் தன்னுடன் பயணிக்கும்படியும், அதற்குள் இந்த வாழ்க்கை போரடித்தால் தானே, நட்சத்திராவைக் கொல்வதாகச் சொல்கிறார் பாரதிராஜா. அதற்குச் சம்மதித்து அவருடன் பயணத்தில் நட்சத்திராவும் உடன் செல்கிறார். பயணத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை நட்சத்திராவுக்குப் புரிய வைக்கிறார். இதனிடைய நட்சத்திராவை கடத்தியதாக பாரதிராஜா, அவரது அக்கா கணவர் போலீசிடம் புகார் அளிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் வயதான காலத்தில் கதாநாயகனாக நடித்தது போல பாரதிராஜாவுக்கும் இந்த வயதில் கதாநாயகனாக நடிக்கும் ஆசை வந்துள்ளது. அதில் தவறேதும் இல்லை. வயதான காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் சில ஹீரோக்கள் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால், பாரதிராஜா ஒவ்வொரு வார்த்தையையும் முழுங்கிப் பேசி வசனம் பேசி முடிப்பதற்குள் கொட்டாவி வந்துவிடுகிறது. ஒரு இளம் பெண்ணுக்கு வாழ்க்கையின் சுவாரசியத்தை, அர்த்தத்தை புரிய வைக்கும் ஒரு கதாபாத்திரம். அழுத்தமான வசனங்களை எழுத எவ்வளவோ காட்சிகள். ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் தான் அது இருக்கிறது.

படத்தை தன் துறுதுறு நடிப்பால் ஓரளவுக்கேனும் தாங்கிப் பிடிப்பவர் நட்சத்திரா தான். அவருடைய கதாபாத்திரத்தில் அப்படியே ஐக்கியமாகி விடுகிறார். முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கிறது.

இவர்கள் இருவரைத் தவிர பாரதிராஜாவின் மனைவியாக மௌனிகா சில காட்சிகளில் வந்து பின்னர் மௌனமாகிவிடுகிறார். நட்சத்திராவின் அக்கா, அக்கா கணவர் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

படத்தில் லண்டனையும், அதன் சுற்றுப்புறங்களையும் அழகாக சுற்றிக் காண்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன். படத் தொகுப்பாளர் பல இடங்களில் பிரீஸ் செய்வது ஏன் எனத் தெரியவில்லை. சில காட்சிகளில் திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் ஒரு டெலிபிலிம் பார்ப்பது போலத் தோன்றுகிறது. ரகுநந்தன் இசையில் எதுவும் சொல்லிக் கொள்வது போல இல்லை.

கிரியேட்டிவிட்டி துறையில் இருப்பவர்கள் தங்கள் புகழ் நிலைத்திருக்கும் காலத்திலேயே ஓய்வு பெறுவதுதான் அவர்கள் தங்கள் கிரியேட்டிவிட்டிக்குக் கொடுக்கும் ஒரு மரியாதை.

மீண்டும் ஒரு மரியாதை - தேடல்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • daran -

  dappa movie.

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  ஸ்ரீதர், சேரன் போன்றவர்களுடன் ஒப்பிட்டால் அவர்கள் கால் உயரம் கூட இருக்கமாட்டார் இந்த பாரதிராஜா. ஆனால் தன்னை தானே இயக்குனர் இமயம் என்று அறிவித்து இமயத்துக்கு மரியாதையை கெடுத்தவ்வர் இந்த கூழாங்கல்.

  • Dhanabalan - CHENNAI,இந்தியா

   தலைக்கனம் கொண்டவர்.திமிர் பிடித்தவர் அகம்பாவம் அதிகம்

  • Dhanabalan - CHENNAI,இந்தியா

   இவர் வைரமுத்து போன்றவர்கள் தான் தான் திறமைசாலிகள் என்ற எண்ணம்

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  பாரதி ராஜாவுக்கு கதா நாயகனாக நடிக்கவேண்டும் என்பதில் ஒரு வெறி . அதை அவர் நிறைவேற்றி கொண்டு விட்டார் . தயாரிப்பாளர் தான் முழு மொட்டை

 • mani -

  good movie Im watching 3 times. dear friends Pls watch 2 times. 2020 best movie of this year. My rating 5/5

  • uthappa - san jose

   யான் பெற்ற துன்பம் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்

 • Aarkay - Pondy,இந்தியா

  1.5 மிகவும் அதிகமென்பேன் என்னைக்கேட்டால், மைனஸ் ஐந்து தரலாம்

 • ragha vendran -

  vayathana kalauthula hero va mattum thaan nadikarangannu Rajini,Kamal sir as Thana solringa..atha direct a sollitu ponga..oru movie review na atha pathi mattum sollunga..ethaiya eluthanumnu eluthathinga..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement