Load Image
Advertisement

MIT கல்வி நிறுவன கல்வி ஆலோசகர் கௌரி ராவ் துவக்கி வைத்தார் | Table Tennis Tournament

திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகம், எம்ஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் நரேஷ் குமார் இணைந்து வேலூர் அனு பிரியாவின் முதலாம் ஆண்டு நினைவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. போட்டியை எம் ஐ டி கல்விக்குழுமம் கல்வி ஆலோசகர் கௌரி ராவ் துவக்கி வைத்தார். எம்ஐடி கல்விக்குழுமம் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன், பாலிடெக்னிக் முதல்வர் ரஞ்சித் குமார், வேளாண் கல்லூரி முதல்வர் குமரவேல், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நர்சிங் கல்லூரி முதல்வர் வரலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழக தலைவர் மேஜர் பொன்னுரத்தினம் வாழ்த்தி பேசினார். இப்போட்டி 11, 13. 15. 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இருபாலர், 40 வயதுக்கு மேற்பட்ட இருபாலர் மற்றும் இரட்டையர் இடையே நடைபெற்றது. மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement