Load Image
Advertisement

படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை! கியூ பிரிவு ஸ்கெட்சில் தப்பிய கும்பல்

படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை! கியூ பிரிவு ஸ்கெட்சில் தப்பிய கும்பல் | beedi leaves Smuggling தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், டீசல், பீடி இலை மற்றும் பொதைப்பொருள் கடத்துவது அவ்வப்போது நடக்கிறது. இதை தடுக்க கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாளமுத்து நகர் பகுதியில் இருந்து பீடி இலை கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அங்கு சென்ற போது சரக்குடன் கடற்கரையில் 2 பைபர் படகுகள் அனாதையாக நின்றன. அதில் சோதனை செய்த போது 3 டன் பீடி இலை இருந்தது. போலீசார் வருவதை அறிந்ததும் கடத்தல் கும்பல் தப்பி ஓடியது தெரியவந்தது. பீடி இலை, 2 பைபர் படகு, ஒரு பைக்கை போலீசார் கைப்பற்றி, கும்பலை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement