Load Image
Advertisement

தோட்டத்துக்குள் புகுந்து கட்டைக் கொம்பன் யானை அட்டகாசம் | An elephant damaged an electric fence

தோட்டத்துக்குள் புகுந்து கட்டைக் கொம்பன் யானை அட்டகாசம் | An elephant damaged an electric fence | Nilgiris நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாம்பதி பகுதிக்கு கட்டைக் கொம்பன் மற்றும் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. திங்கள் இரவு இப்பகுதிக்கு வந்த கட்டை கொம்பன் விவசாய தோட்டத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலிகளை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்தது. ராஜன், விஜயன் உள்ளிட்டோர் தோட்டங்களில் வாழை, பாக்கு, காபி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. யானையை பொதுமக்கள் விரட்ட முயன்றனர். அப்போது ராஜன் என்பவரை யானை துரத்தியது. தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வனக்குழுவினர் யானையை துரத்தினர். வனச்சரகர் ரவி மற்றும் வருவாய் துறையினர் யானை சேதப்படுத்திய தோட்டங்களை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தரப்படும் என உறுதியளித்தனர். இரவு நேரங்களில் யானைகள் வரும்போது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் யானையை துரத்த முற்படக்கூடாது என கேட்டுக் கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement