Load Image
Advertisement

வீட்டில் ஆளில்லாததால் மர்ம நபர் கைவரிசை…| former government official house 6 lakh jewels stolen

புதுச்சேரி மாநிலம் ஏனாம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாதா ஸ்ரீ ராமராஜூ (73). இவர் ஓய்வு அதிகாரி. கடந்த மாதம் ராமராஜூ தனது மனைவியுடன் திருப்பதியில் வசிக்கும் மகன் வீட்டுக்கு சென்றார். 40 நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்த தம்பதி ஊர் திரும்பினர். வீட்டின் மெயின் கேட் உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. வீட்டின் பின்பக்க கதவு திறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள்,15 ஆயிரம் ரொக்கம் உள்பட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. ஏனாம் இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ நுக்கராஜூ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement