Load Image
Advertisement

பிரபல ரவுடி ஓட்ட வடை மணி மனைவி பார்த்த வேலை! சுற்றி வளைத்த போலீஸ் | Chennai crime news

சென்னை கொடுங்கையூர் பகுதியில் போலீசார் இரவு ரோந்து சென்றனர். கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் சென்ற போது சந்தேகத்துக்கிடமாக நின்ற பெண்ணை மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் அவர் மாதவரம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்த ஜான்சி ராணி வயது 28 என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடம்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், ஜான்சி ராணியுடன் சேர்ந்து கஞ்சா விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் முக்கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான்சி ராணி பிரபல ரவுடி ஓட்ட வடை மணியின் மனைவி ஆவார். செபாஸ்டின் என்பவர் மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி ஜான்சி ராணி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. செபாஸ்டினை போலீசார் தேடி வருகின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement