Load Image
Advertisement

அவினாசி KPR மில் சாதனை | Education for 35,000 women employees with job and salary | KPR Mill

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் அருகே செயல்பட்டு வருகிறது கே.பி.ஆர். மில் நிறுவனம். இந்த நிறுவனத்தின் நூல் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு உற்பத்தி கூடங்கள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். அதில் 80 சதவீதம் பேர் பெண்கள். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து குடும்ப வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு வருகின்றனர். அவர்களில் பெண்கள் கல்வியை தொடரவும், அவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் உயர் கல்வி பெற்று வாழ்வில் தற்சார்பாக முன்னேற வேண்டும் என மில் நிறுவனர் கே.பி.ராமசாமி முடிவு செய்தார். இதற்காக கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கே.பி.ஆர். பெண் பணியாளர் கல்விப் பிரிவை துவக்கினார். பட்டப்படிப்பு மற்றும் உயர் கல்வி படிக்க ஆர்வமுள்ள பெண் பணியாளர்கள் 8 மணி நேர வேலை நேரம் போக மீதி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் கல்வி வல்லுனர்கள் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement