Load Image
Advertisement

விவசாயம் தழைக்க, திருமண தோஷம் நீங்க வேண்டி யாகம் | Dindigul | trees marriage

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மல்வார்பட்டி பொதுமக்கள் அரச மரத்தை சிவனாகவும் வேப்ப மரத்தை பார்வதியாக பூஜை செய்து வருகின்றனர். வேப்பமரம் பூ பூத்ததையடுத்து இரு மரங்களுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சடித்து வழங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க சிறுமிகள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் வெற்றிலை பாக்கு மாற்றி கொண்டனர். வேத மந்திரங்கள் முழங்க அரசன் நாயகனுக்கும், வேம்பு நாயகிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டிய நடந்த திருமண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement