Load Image
Advertisement

அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் வேதனை | water Waste In Veeranam LakeFarmers suffering Cudda

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் மேற்குப் பகுதி கரை மதகு வழியாக குடிகாடு, கோதண்டவிளாகம், வட்டத்தூர், புடையூர் உள்ளிட்ட கிராமங்களில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது . பெரிய சிமென்ட் குழாய்களை பராமரிக்காததால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 46 அடிக்கு மேல் உயர்ந்து வரும் நிலையில் வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாகி வருவது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. ஏரியின் பாசன மதகில் சில வாரங்களுக்கு முன்பு புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது. இப்பணிகள் முறையாக நடக்காததால் ஷட்டர் பழுதாகி தண்ணீர் விரயமாகி வருகிறது. ஷட்டர் மற்றும் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement