Load Image
Advertisement

மழையால் குளமாக மாறும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் Kilambakkam Bus Station | Kilambakkam bus stand

சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில், 80 ஏக்கரில் 400 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஒரு மணி நேரம் மழை பெய்தாலே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஜிஎஸ்டி ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதை தடுக்க 17 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கால்வாயில் பாயும் மழைநீரை கிளாம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. 70 சதவீத பணி முடிந்து விட்டது. இன்னமும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் எதிரே குளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதை சரி செய்வதற்காகவே பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா தள்ளி போகிறது. எனவே, கால்வாய் பணியை துரிதப்படுத்தி மழைநீர் தேங்காமல் செய்வது அவசர அவசியம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement