Load Image
Advertisement

கருக்கா வினோத்தின் குற்ற பின்னணி Gundas on Karukka Vinod | Petrol Bomb Culprit | CCP

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 2015ல் மாம்பலம் டாஸ்மாக் கடை, 2017ல் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வழக்குகள் உள்ளன. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் சிறையில் இருந்தார். ஜாமினில் வந்த 3வது நாளே கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியதால் கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. நீட் ரத்து, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். ராஜ்பவன் சம்பவத்திற்கு முன்பு, வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? தடை செய்யப்பட்ட PFI அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி என்ஐஏ விசாரிக்கிறது. புழல் சிறையில் உள்ள வினோத்மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கருக்கா வினோத் மீது போடப்பட்ட 4வது முறையாக குண்டாஸில் வழக்கு போடப்பட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement