Load Image
Advertisement

TNல் லாட்டரி சீட்டு விற்கப்பட்டதாக பரபரப்பு புகார் | Onam bumper lottery | 25 crore prize| kerala

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முடிவுகள் கடந்த 20ம்தேதி அறிவிக்கப்பட்டது. TE 230662 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 25 கோடி ரூபாய் முதல் பரிசு கிடைத்தது. திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜ், குப்புசாமி, கோவையைச் சேர்ந்த சாமிநாதன், ராமசாமி ஆகியோர் சேர்ந்து TE 230662 லாட்டரி டிக்கெட்டை வாங்கியது தெரிய வந்தது. 4 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரக அலுவலகத்துக்கு சென்று டிக்கெட்டை ஒப்படைத்து பரிசுத்தொகையை வழங்கும்படி கேட்டனர். பெதுவாக, கேரள லாட்டரி திட்டத்தை பொறுத்தவரையில் கேரள எல்லையில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளுக்குத்தான் பரிசு வழங்கப்படும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு கிடைத்தால், லாட்டரி சீட்டு எப்படி கிடைத்தது? கேரளா வந்தபோது வாங்கினார்களா? அதற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து உறுதி செய்த பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும். ஏனென்றால், மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்கப்பட்டால் அது பிளாக்கில் விற்கப்பட்டதாக கணக்கில் கொள்ளப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement