Load Image
Advertisement

ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகள் பாதிப்பு | Dengue Fever | 5 Year Girl child died | Tirupathur

திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டையை சேர்ந்தவர் சுமித்ரா. கணவர் மணிகண்டன் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு பிரித்திகா(15), தாரணி(13), யோகலட்சுமி(7), அபிநிதி(5), 8 மாத குழந்தை புருஷோத்தமன் என 5 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 7 வயது யோகலட்சுமி, 5 வயது அபிநிதி, குழந்தை புருஷோத்தமன் ஆகிய 3 பேரும் காய்ச்சலால் பாதித்ததால் கடந்த 23ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் யோகலட்சுமி மட்டும் பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அபிநிதி, புருஷோத்தமன் இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு 5வயது சிறுமி அபிநிதி இறந்தார். 8 மாத குழந்தை புருஷோத்தமனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதித்து, ஒரு சிறுமி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவராஜ்பேட்டையில் குப்பை, கழிவுநீர் வாய்க்காலை சரிவர சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தந்தை இல்லாத குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நிவாரணம் கிடைக்கும் வரை போராடுவோம் என கூறி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement