Load Image
Advertisement

காவிரி கமிட்டி உத்தரவால் கர்நாடகா ஷாக் | Cauvery Regulation Committee | Meeting | Order to Karnataka

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என விவசாய அமைப்பினர் அடுத்தடுத்து அங்கு பந்த் நடத்துகின்றனர். வரும் 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்கள் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடந்தது. கர்நாடகா சரியான வகையில் தண்ணீர் திறந்து விடவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியது. சுப்ரீம் கோர்ட், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மாதாந்திர தண்ணீர் அளவை வழங்கவில்லை. நிலுவை நீரை உடனே திறந்து விட வேண்டும். வினாடிக்கு 12,500 கன அடி நீரை காவிரியில் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதத்தை முன் வைத்தனர். தமிழக அரசின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிக்கிறது. எங்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது. காவிரியில் இதற்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றனர். இதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 15 வரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement