Load Image
Advertisement

வேன் மோதி இறந்தார்; கே.எஸ். அழகிரி அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், அளவூரை சேர்ந்தவர் நாகராஜ் (57). காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர். வாலாஜாபாத் ஒன்றியக்குழு கவுன்சிலராக இருந்தார். சென்னையில் காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசிய கருத்தரங்கில் நாகராஜ் பங்கேற்றார். இரவில் ஆதரவாளர்களுடன் 2 கார்களில் காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். தாம்பரம் அருகே காமராஜபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள தள்ளு வண்டி கடையில் இரவு 11 மணிக்கு ஆதரவாளர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டார். அதே கடையில் மினி வேன் டிரைவர் ஒருவர் தனது நண்பர்களுடன் சப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும் வேனை டிரைவர் ஸ்டார்ட் செய்தார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் அதிவேகத்தில் கிளம்பிய வேன், சாப்பிட்டுக்கொண்டிரு்நத நாகராஜ் மீது பயங்கரமாக மோதியது. உடனே வேன் டிரைவரும் நண்பர்களும் தப்பினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜை அவரது கட்சியினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு நாகராஜ் இறந்தார். பள்ளிகரணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். வேன் டிரைவர், கொலை நோக்கத்துடன் விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது போதையால் நடந்த விபத்தா? என விசாரணை நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி ஊராட்சி தலைவராகவும் நாகராஜ் பதவி வகித்துள்ளார். நாகராஜின் மரணம் பற்றி கேள்விப்பட்டதும் கே.எஸ்.அழகிரி அதிர்ச்சியடைந்தார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கருத்தரங்கம் நடந்த அரங்கத்தின் கீழே நாகராஜ் அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என கூறினேன். அன்று இரவே அவர் விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக் கூடாத ஒருவரை இழந்து விட்டோம். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜிவ் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த செயல் வீரர் அவர். அளவூர் நாகராஜ் மறைவு காங்கிரசுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement