Load Image
Advertisement

தொடர்ந்து பொய்யை பரப்புவதால் உண்மை ஆகிவிடாது Vanathi srinivasan| DMK| CM Stalin| BJP

கேவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அறிக்கை: 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புகிறார். குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக திமுக வாக்குறுதி அளித்தது. 2 ஆண்டுகளுக்கு பின், 50 சதவீத பெண்களுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கியுள்ளது. செல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக வைத்திருக்கும் ஸ்டாலின், பிரதமர் சொன்ன 15 லட்சம் ரூபாய் என்னாச்சு என்று கேட்டு கூச்சம் இல்லாமல் பொய்யை பரப்புகிறார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றுதான், 2014 லோக்சபா தேர்தலின்போது பிரதமர் மோடி சொன்னார். மக்களுக்கு புரிய வைக்க அப்படி கூறினார். அதை சுட்டிக்காட்டியபோதும், 2019 தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய்யை திரும்ப திரும்ப பரப்பினார்கள். ஆனால், அந்த தேர்தலில் பாஜவுக்கு 20 எம்பிக்கள் அதிகம் கிடைத்தனர். 2024 தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. அது தெரிந்துதான், விரக்தியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அவதூறு பரப்பி வருகிறார். மோடி ஆட்சியில் ஊழல் நடந்ததை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியாக அவதூறு பரப்புகிறார். திட்டங்களுக்கு ஆரம்பத்தில் திட்டமிட்டதைவிட பல மாறுதல்கள் செய்யப்பட்டதால் செலவு அதிகமானது. அதைத்தான் சிஏஜி கூறியுள்ளது. இது, ஸ்டாலினுக்கு தெரிந்திருந்தும் அவதூறாக பேசுகிறார். ஊழல் நடந்திருந்தால், வழக்கு தொடர வேண்டியது தானே. பொய்களை பரப்புவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ளாவிட்டால், மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement