Load Image
Advertisement

90 கி.மீ. தொலைவில் நின்ற பஸ்சை காட்டி கொடுத்தது ஜிபிஆர்எஸ் TTD| Tirumala Tirupati| E-Bus

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களை அழைத்து செல்ல 10 மின்சார பஸ்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. அதில் ஒரு பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அதிகாலையில் மர்ம நபர் ஒருவர், மின்சார பஸ்சை திருடி சென்றார். காலையில் டூட்டிக்கு வந்த டிரைவர் பஸ் காணாமல் போனது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். திருமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பஸ்சில் இருக்கும் GPRS கருவி மூலம் பஸ் எங்கு உள்ளது என அறிய முயன்றனர். திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாயுடுபேட்டையில் பஸ் நிற்பதாக காட்டியது. திருமலை தேவஸ்தான அதிகாரிகளுடன் போலீசார், அங்கு சென்றனர். சாலையோரத்தில் பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. உள்ளே யாரும் இல்லை. பஸ் பேட்டரி தீர்ந்ததால், திருடன் அப்படியே விட்டுவிட்டு சென்றதாக போலீசார் கூறினர். 2 கோடி மதிப்புள்ள அந்த பஸ் மீட்கப்பட்டு திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சை திருடியவனை போலீசார் தேடுகின்றனர். இதே போல், திருமலை திருப்பதி தேவஸ்தான சுகாதார அதிகாரி ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார கார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருடு போனது. கடப்பா மாவட்டம் ஒன்டிமிட்டா என்ற இடத்தில் இருப்பது ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement