Load Image
Advertisement

கவனிக்க ஆள் இல்லையென அமைச்சு பணியாளர்கள் புலம்பல்! TN Police | Job Vacancy | Workload

தமிழக காவல் துறையில், ஒரு போலீஸ்காரர் பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை, அவருக்கான சம்பளம், விடுப்பு, பதவி உயர்வு, இடமாறுதல், தண்டனைகள், பணி பதிவேடு ஆகிய பணிகளை மேற்கொள்வது, அமைச்சுப் பணியாளர்கள் தான். மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசாரின் எண்ணிக்கை, 1.31 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப, அமைச்சுப் பணியாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. இதனால், பணிச்சுமை அதிகரித்துள்ளதாக அவர்கள் புலம்புகின்றனர். 1.31 லட்சம் போலீசாரின் பணிப்பதிவேடுகளை கவனிக்க, 2,000 அமைச்சுப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 1,500 பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement