Load Image
Advertisement

நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் | Maitreyan | Bjp

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் செல்வாக்குடன் இருந்தவர் மைத்ரேயன். சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றிய மைத்ரேயன், தமிழக பாஜகவில் பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தலைவர் பொறுப்புகளை வகித்தார். 2000ம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 2002 முதல் 2019 வரை 3 முறை அதிமுகவின் ராஜ்ய சபா எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பிறகு, இபிஎஸ் அணிக்கு தாவினார். அங்கும் அவர் ஓரங்கட்டப்பட்டார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசிய காரணத்துக்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் பாஜகவில் மீண்டும் சேர முடிவெடுத்தார். அதன்படி, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் டில்லியில் பாஜகவில் இணைந்தார். தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement