Load Image
Advertisement

ஒகேனக்கலில் ஊராட்சி தலைவருடன் ஒப்பந்ததாரர் அட்ராசிட்டி | Hogenakkal Road Issue | Damaged Road

ஒகேனக்கல் ஊட்டமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பாதையில் சிமென்ட் சாலை போடப்படுகிறது. அந்த சாலை தரம் இல்லாமல், உடைந்து சிதறும் நிலையில் இருந்தது. அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி வார்டு மெம்பர்கள், ஒப்பந்ததாரர் குமாரிடம் இதுபற்றி கேட்டனர். ஆனால் அவர், எதையும் காதில் வாங்காமல் உங்களால் ஆனதை பாருங்கள் என அலட்சியமாக பதில் அளித்தார். ஒப்பந்ததாரரின் பணியாட்கள் வார்டு மெம்பர்களை தாக்க பாய்ந்தனர். இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் இதற்கு உடந்தையாக இருப்பதால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement