Load Image
Advertisement

ஆவினில் அநியாயம் | திராவிட மாடலின் இன்னொரு பரிமாணம் | can u believe this

சென்னை அம்பத்தூரில் செயல்படும் ஆவின் நிறுவனத்தில் 30க்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்கள், பள்ளி கோடை விடுமுறையில் வேலைக்கு வந்தவர்கள். தினக்கூலி அடிப்படையில் கான்ட்ராக்டர் வேலைக்கு வைத்துள்ளார். ஒன்றரை மாதமாக கூலி தரப்படவில்லை. பொறுத்திருந்து பார்த்த சிறுவர்கள், ஆவின் நிறுவனம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, இவர்களை வேலைக்கு வைத்ததாக கூறப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணி அமர்த்துவது சட்டப்படி குற்றம். அரசு நிறுவனத்திலேயே அது நடந்திருப்பதும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பால் வள அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும்போது, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement