Load Image
Advertisement

₹1710 கோடி திட்டத்தில் ஓட்டை | Bihar Bridge collapse

பீகாரில் பாகல்பூர் - ககாரியா மாவட்டங்களை இணைக்கும் விதமாக கங்கையின் குறுக்கே 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டும் பணி 2014ல் தொடங்கியது. மொத்த மதிப்பு 1,710 கோடி. இந்த பாலத்தின் ஒரு பகுதி பலத்த காற்று, மழையால் இடிந்து விழுந்தது. ககாரியாவின் பர்வட்டா பகுதியை ஒட்டி 100 அடி நீளத்திற்கு பாலத்தின் 3 தூண்கள் சரிந்து விழுந்தன. breath இந்த பாலம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் 30ல் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதற்கு கட்டுமான நிறுவனம் புயலை காரணம் காட்டியது. வரும் டிசம்பரில் பாலத்தை திறக்க திட்டமிட்டு இருந்த நிலையில் மீண்டும் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி விசாரிக்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழல்தான் பாலம் 2முறை இடிந்து விழ காரணம் என எதிர்கட்சிகள் கூறுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement