Load Image
Advertisement

8ம் தேதி சாம்பியன்ஷிப் போட்டி ஆரம்பம் | Sex ChampionShip | Swedan

செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதையே பல நாடுகள் அனுமதிக்காத சூழலில், ஐரோப்பிய நாடான ஸ்வீடன் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. இதை அடுத்து ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷன் ஒரு சாம்பியன்ஷிப் போட்டி அறிவித்துள்ளது. வரும் 8 ம் தேதி போட்டி தொடங்க உள்ளது. பல நாடுகளில் இருந்து 20 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்க வருகிறார்கள். தினமும் 6 மணி நேரம் போட்டி நடைபெறும். பங்கேற்பாளர்கள் ஒரு மணி நேரம் வரை விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும். 3 நடுவர்கள் கண்காணிப்பார்கள். துணையை கவர்தல், மசாஜ் செய்தல், உடல் தோற்றம், வெவ்வேறு போஸ்களை மேற்கொள்ளுதல், வித்தியாசமான பொசிஷன், உச்சம் தொடும் நேரம் உள்ளிட்ட 16 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய ரிஷி வாத்சாயனர் எழுதிய காமசூத்ராவின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயலில் நிரூபிக்க முடிந்தால் அவர்களுக்கு போனஸ் புள்ளிகள் வழங்கப்படும். பார்வையாளர்களின் 70 சதவீத மதிப்பெண், நடுவர்களின் 30 சதவீத மதிப்பெண் அடிப்படையில் ஸ்கோர் வழங்கப்படும். போட்டி குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், சீக்கிரமே மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடக்கும் என அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement