Load Image
Advertisement

ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்!

ராமநாதபுரம் ஆர்.எஸ் மடையை சேர்ந்தவர் ரவுடி கொக்கி குமார். இவர் மீது கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவஞானபுரத்தை சேர்ந்த மற்றொரு ரவுடி அசோக்குமாருக்கும், குமாருக்கும் கஞ்சா விற்பதில் முன் விரோதம் இருந்தது. இது தொடர்பான மோதலில் குமாரின் மைத்துனர் சந்துருவை அசோக்குமார் கடந்த மாதம் வெட்டினார். இதற்கு பழி தீர்க்க அசோக்குமாரை பல இடங்களில் குமார் தேடினார். தலைமறைவாக இருந்த அசோக்குமார், சந்துரு வழக்கில் ஆஜராக ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட் வளாகத்தில் குமார் காத்திருந்தார். அசோக்குமார் வந்ததும் தலை, கை, காலில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். போலீசார் அசோக் குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனிப்படை போலீசார் குமாரை தேடினர். உச்சிப்புளி அருகே பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். கைது செய்ய சென்ற போது, தப்பி ஓட முயன்ற குமாரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். அவரை ராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் நடந்து 6 மணி நேரத்தில் ரவுடியை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement