Load Image
Advertisement

மகனை காதலித்ததால் கொலையா என விசாரணை? | Karur Murder | DMK Councillor Arrest

கரூர் மாவட்டம் சவாரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி. கணவர் தங்கராசு. 15 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். விக்னேஸ்வரி, தேவிகா இவரது 2 மகள்கள் . இளைய மகள் தேவிகாவுக்கு வயது 16. அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் மகன் கஜேந்திரனுடன் காதல் ஏற்பட்டது. கஜேந்திரனுக்கு வயது 19. இது தெரிய வந்ததால் தேவிகா குடும்பத்தாரை கஜேந்திரனின் உறவினர்கள் எச்சரித்தனர். 24ம் தேதி இரவு தேவிகாவை போனில் அழைத்த கஜேந்திரன் அவரை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். தேவிகாவும் தனது அக்கா துணையுடன் கஜேந்திரன் வீடு அருகே சென்றார். அப்போது கஜேந்திரன் வீட்டார் தேவிகாவை தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பித்த தேவிகாவின் அக்கா உறவினர்களிடம் தகவலை சொன்னார். அவர்கள் வந்து கேட்டபோது தேவிகா இங்கு வரவில்லை எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். தேவிகா அன்று இரவு முதல் மாயமானார். மறுநாள் குளித்தலை போலீசில் தேவிகாவின் தாயார் புகார் அளித்தார். அதற்கு அடுத்த நாள் காலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தேவிகாவின் உடல் கிடைத்தது. திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தேவிகாவின் உறவினர்கள் காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என மறுப்பு கூறினர். நேற்று கரூர் கலெக்டர் ஆபீசில் நீதி கேட்டு புகார் அளித்தனர். சம்பவம் நடந்து 4 நாள் கழித்து இன்று காலை நங்கவரம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு கவுன்சிலர் குணசேகர், அவரது மகன் கஜேந்திரன், மாமா முத்தையன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement