Load Image
Advertisement

தேசதுரோக செயல் என்கிறது பாஜக | Rashtriya Janata Dal | BJP | Modi

970 கோடியில் 64500 சதுரடியில் கட்டப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பார்லிமென்ட் கட்டடத்தின் வடிவமைப்பை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி ட்வீட் செய்தது சர்ச்சையானது. ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி ஜனநாயகத்தை அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம் தெரிவித்தது. அக்கட்சி மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று பீகாரை சேர்ந்த பாஜக எம்பி சுஷில் குமார் மோடி கூறினார். ராஷ்டிரிய ஜனதாதளம் அரசியலின் சவப்பெட்டியில் இது கடைசி ஆணியாக இருக்கும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நிர்வாகி ஷெசாத் பூனவல்லா Shehzad Poonawalla விமர்சித்தார். இதற்கு பதிலளித்த லாலு கட்சி எம்எல்ஏ சக்தி சிங் யாதவ், அந்த சவப்பெட்டி, ஜனநாயகம் புதைக்கப்பட்டதை பிரதிபலிப்பதாக கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement