Load Image
Advertisement

பிரதமர் மோடி சொல்லும் காரணம் | New Parliment | Modi speech

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, வரும் காலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; எனவே, புதிய பார்லிமென்ட் கட்டடம் காலத்தின் கட்டாயம் என்றார். லோக்சபாவில் 543 எம்பிக்களும், ராஜ்ய சபாவில் 250 எம்பிக்களும் உள்ளனர். பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள மத்திய மண்டபத்தில் இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடக்கும். அங்கு 440 பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளது. இதனால் எல்லா எம்பிக்களும் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. ஆனால், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தை நடத்துவதில் சிரமம் இருக்காது. லோக்சபாவில் 1280 எம்பிக்கள் உட்காருவதற்கான இருக்கை வசதிகள் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement