Load Image
Advertisement

மாணவர்கள் மகிழ்ச்சியில் மண் அள்ளி போட்டது திமுக | Edappadi | DMK

தமிழகத்தில் 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். அவரது அறிக்கை; சென்னை ஸ்டான்லி, திருச்சி, தர்மபுரி ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சிய போக்கே காரணம். இக்கல்லூரிகளில் உள்ள அதிகளவிலான மருத்துவ சீட்களை தமிழகம் இழக்கும் அபாயம் உள்ளது. இது தமிழகத்திற்கே ஒரு பெரும் தலைக்குனிவு. அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டுவந்தபோது மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த மகிழ்ச்சியில் திமுக அரசு மண் அள்ளி போட்டுள்ளது. மீண்டும் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement