Load Image
Advertisement

மபியில் 3 பேரை என்ஐஏ கைது செய்தது | ISIS | MadhyaPradhesh | Dinamalar

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் வாட்ஸ் அப் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகள் பரப்பப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். ஜபல்பூரை சேர்ந்த முகமது அடில் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து, அதில் பலரை சேர்த்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை பரப்பியது உறுதியானது. வாட்ஸ் அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் ஐஎஸ்க்கு ஆள் சேர்த்ததும் நிதி திரட்டியதும் தெரிய வந்தது. பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தவும் அதற்காக ஆயுதங்களை வாங்கவும் சதித்திட்டம் தீட்டினர். இதுதொடர்பாக 13 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கின. அதைத் தொடர்ந்து, முகமது அடில் கான் உட்பட 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement