Load Image
Advertisement

₹.400 கோடி மோசடியில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலருக்கு பங்கு? | ELFIN | Dinamalar

திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, சென்னை, திருப்பூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் ELFIN எல்ஃபின் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஓராண்டில் 2 மடங்காக தாருவோம் என கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்தனர். பரிசு பொருட்கள் வழங்குவது, வெளிநாடு சுற்றுலா ஆபர் என முதலீட்டாளர்களை கவர்ந்தனர். இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பல கோடி ரூபாய் சேர்ந்ததும், எல்ஃபில் நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகினர். பணத்தை பறிகொடுத்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் கொடுத்தனர். சுமார் 400 கோடி ரூபாய் சுருட்டியதாக சொல்கிறார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. எல்ஃபின் நிறுவன உரிமையாளர்கள் அண்ணன் தம்பியான ராஜா, ரமேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. நிதிநிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் பற்றி சிறப்பு குழு விசாரித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். பிரபாகரன், திருச்சி மாநகராட்சி 17 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொழிலாளர் முன்னணி மாநில துணை செயலாளராகவும் உள்ளார். முன்னதாக இவரது வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தியது நினைவிருக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement