Load Image
Advertisement

லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி சிலைகள் உடைப்புக்கு எதிராக கொந்தளிப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 23ம் தேதி மர்ம ஆசாமி சாமி சிலைகளை உடைத்துள்ளான். வேல், சேவற்கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்களை திருடினான். அதற்குள் கோயில் நடை திறக்கப்பட்டதால் ராஜகோபுரத்தில் போய் பதுங்கிக்கொண்டான். அங்குள்ள சிலைகளையும் உடைத்த அந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியைச் சரவணபாரதி (32) என்பது தெரிந்தது. சிறையில் அடைத்தனர். கோயிலில் சிசிடிவி உள்ளிட்ட உரிய பாதுகாப்பு வசதிகளை செய்யாத கோயில் செயல் அலுவலரை மாற்றக்கோரியும், செக்யூரிட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்து முன்னணி சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட சிவனடியார்கள், இந்து முன்னணியினர், பாஜக தொண்டர்கள் என, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement