Load Image
Advertisement

பயிற்சிக்கு மைதானம் இல்லாமல் திண்டாடும் பாரா வீரர்கள் Shorts

கோவையை சேர்ந்த மூத்த தடகள பயிற்சியாளர் நாராயணனுக்கு, கடந்த 2021-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு பயிற்சியாளர் விருதை தமிழக அரசு வழங்கியது. அடுத்து மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதை பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்து அவர் செயல்பட்டு வருகிறார். இதற்காக பாரா அத்லெடிக் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், பாரா அத்லெடிக்கில் நிறைய வீரர்கள் வர வேண்டும் என்பதே எனது எண்ணம். கோவை பாரா அத்லெடிக்ஸ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு அதிகம் பேர் உதவி செய்ய முன் வருகிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் தமிழகம் சார்பில் குறிப்பாக கோவை வீரர்கள் வாயிலாக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. மேலும் கோவையில் பாரா அத்லெடிக் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மேலும் பல வசதிகள் தேவை என்கிறார் நாராயணன். அது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு இதோ.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement