Load Image
Advertisement

விரட்டி விரட்டி வெட்டி கொலை பட்டபகலில் வாலிபருக்கு கொடூரம்

திருச்சி உறையூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தார். உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்பொழுது திடீரென்று வந்த 3 மர்ம ஆசாமிகள் சண்முகத்தை அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சி அடைந்த சண்முகம் அங்கிருந்து வேகமாக தலைதெறிக்க ஓடினார். 3 மர்ம ஆசாமிகளும் விடவில்லை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனை பார்த்த அப்பகுதிமக்கள் ஏராளமானவர்கள் அலறியடித்து ஓடினார்கள். ஒரு காபி கடையில் நுழைந்தபோது அவரை அங்கு வழிமறித்து அரிவாளால் சராமாரியாக வெட்டினார்கள். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானான்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement