Load Image
Advertisement

ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த அபூர்வ நடிகை ஆச்சி மனோரமா | Manorama Birthday | Dinamalar

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை நாயகி, “பொம்பள சிவாஜி” என கலையுலகினரால் பாராட்டுப் பெற்ற “ஆச்சி” மனோரமா அவர்களின் 84வது பிறந்த தினம் இன்று… கோபிசாந்தா என்ற இயற்பெயர் கொண்ட மனோரமா, 1939, மே 26 அன்று மன்னார்குடியில், காசி கிளார்க்குடையார் மற்றும் ராமாமிர்தம் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். “ஆச்சி” என அன்போடு அழைக்கப்படும் மனோரமா 12வது வயதிலேயே ஒரு நாடக கலைஞராக தனது கலைப்பணியை ஆரம்பித்தார். சிறு வயதிலேயே நன்றாக பாடும் திறமை கொண்ட மனோரமா, நாடகத் துறையில் சிறந்து விளங்கி அன்று “பள்ளத்தூர் பாப்பா” என அன்போடும் அழைக்கப்பட்டார். இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்த நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர், கோபிசாந்தா என்றிருந்த இவரது இயற்பெயரை “மனோரமா” என மாற்றி அமைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement