Load Image
Advertisement

கதறும் பஸ் ஊழியர்கள் சித்தராமய்யாவுக்கு கடிதம் | KRSTC | SiddhaRamaiah | FreeBus

கர்நாடகாவில் ஜெயித்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என காங்கிரஸ் தேர்தல் உறுதிமொழி அளித்தது. 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சித்தராமய்யா முதல்வரானார். பெண்களுக்கான இலவச பயணம் உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடக அரசு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அரசு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் அரசு பஸ்களில் செல்லும் பெண்கள் டிக்கெட் எடுக்க மறுக்கின்றனர். கண்டக்டர்கள், டிரைவர்களுடன் பெண்கள் வாக்குவாதம் செய்கின்றனர். இது குறித்து, கர்நாடக மாநில போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசு பஸ்களில் ஏறும் பெண்கள் டிக்கெட் எடுக்க மறுக்கின்றனர். இலவச பயண திட்டம் இன்னும் அமலாகவில்லை என கூறினாலும் ஏற்க மறுக்கின்றனர். தினமும், கண்டக்டர்களுக்கும், பெண் பயணியருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. எனவே, பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement