Load Image
Advertisement

சங்கரன்கோவில் அருகே கோர விபத்து | Car Accident | SankaranKovil | Dinamalar

சங்கரன் கோவில் அருகே பந்தப்புளி ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குருசாமி. வயது 45. பெயிண்டர். அவர் மனைவி வேலுத்தாய், மாமியார் உடையம்மாள், மகன் மனோஜ்குமார் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். ஒப்பனையாள்புரத்தைச் சேர்ந்த அய்யனார் காரை ஓட்டினார். புதன் மாலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளி வேன் 20 மாணவிகளுடன் பனவடலிசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பனவடலிசத்திரத்தில் வேன் சென்றபோது டூவீலரை ஓட்டிச்சென்ற ஒருவர் வண்டியுடன் நடுரோட்டில் விழுந்தார். அவர் மீது மோதாமல் இருக்க வேனை, டிரைவர் வலது புறம் திருப்பினார். அப்போது, எதிரே வந்த குருசாமியின் காருடன் வேன் மோதியது. காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த வேன் டிரைவர், நான்கு மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement