Load Image
Advertisement

சிதைக்கு மகன் தீ மூட்டினார் | Karumuthu Kannan | Dinamalar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தியாகராஜர் குழும தலைவருமான கருமுத்து கண்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 70. கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அமைச்சர்கள் உதயநிதி, தியாகராஜன், பெரியகருப்பன், மூர்த்தி, செந்தில்பாலாஜி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ப.சிதம்பரம், பாஜ மூத்த தலைவர் ெஹச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள், ஆன்மீகவாதிகள், கல்வியாளர்கள், அதிகாரிகள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கருமுத்து கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோயில் துணை கமிஷனர் அருணாச்சலம் தலைமையில் சிவாச்சாரியார்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரை கோச்சடையில் உள்ள கருமுத்து கண்ணன் இல்லத்தில் இருந்து பிற்பகலில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. தத்தனேரி மயானத்தில் உடல் தகனம் நடந்தது. சிதைக்கு மகன் ஹரி தியாகரஜன் தீ மூட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement