Load Image
Advertisement

முதல்வர் ஸ்டாலினுக்கு பழனிசாமி சரமாரி கேள்வி | Stalin | Palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை ஆட்சிக்கு வந்த உடன் தொழில் முதலீடுகளை ஈர்க்க செல்வதாக கூறி தன் குடும்பத்துடன் துபாய்க்கு இன்ப சுற்றுலா சென்றார் ஸ்டாலின். ஒரு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என வாயால் வடை சுட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்து விட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாக தெரியவில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்ய சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகாருக்கு இதுவரை முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை. இப்போது மீண்டும் சிங்கப்பூர், ஜப்பானுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார். ஸ்டாலின் வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் செய்து தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா ? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என மக்கள் கேட்கின்றனர் எனவும் பழனிசாமி கூறி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement