Load Image
Advertisement

கிராமபுறத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டும்: அண்ணாமலை | Annamalai | Navodaya schools

#Annamalai #navodayaschools #TNnavodayaschools பழங்குடியினருக்கான மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி திட்டத்தின் கீழ் பயின்ற, 15 மாணவர்கள், மிக கடினமான ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில், 36 ஆயிரம் பேர் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில் பலர், தமிழை தாய்மொழியாக உடையவர்கள் என்பது வருத்தத்திற்கு உரியது என்கிறார் தமிழக பாஜ தலைவர் அண்ணமாலை. ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற மாணவர்களுக்கு, 75 மாணவிகளுக்கு 33 சதவீத இடங்கள் என சமூக நீதியை நடைமுறைப்படுத்தி இருக்கும் நவோதயா பள்ளிகள், ஒன்பதாம் வகுப்பு வரை எந்த கல்வி கட்டணமும் இன்றி செயல்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல், ஏழை மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகளை தடுப்பது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அண்ணமாலை கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement