Load Image
Advertisement

சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், ஜி 20 மாநாட்டின் சுற்றுலா வளர்ச்சி சார்ந்த கூட்டம் திங்கள் துவங்கி புதன் வரை நடக்கிறது. இதற்காக, ஸ்ரீநகரில் சாலைகள் போடப்பட்டுள்ளன. நகர் முழுதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின், மொரீசியஸ், சிங்கப்பூர், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். சினிமா துறை சார்ந்த சுற்றுலா மற்றும் அதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசுமை சுற்றுலா, டிஜிட்டல் மயம், திறன் மேம்பாடு, சிறு குறு தொழில் வாய்ப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் ஜி20 கூட்டத்தின் முக்கிய பொருளாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். இதற்கு முன் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் சுற்றுலா துறை சார்ந்த ஜி 20 கூட்டம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement