Load Image
Advertisement

விலை இல்லாததால் 5 ஏக்கர் முட்டைகோஸ் அழிப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி , தலமலை, அருள்வாடி கிராமங்களில், கத்திரி, வெண்டை, தக்காளி, முட்டைகோஸ் பயிர்கள் பயிரிடுவது வழக்கம். தற்போது 100 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக உள்ள முட்டைகோசை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கேட்கின்றனர். உரிய விலை இல்லாதால் விவசாயிகள் திகைக்கின்றனர். 1 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஆனால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு எங்களிடம் வாங்கி அவர்கள் பல மடங்குக்கு விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சரியான விலை கிடைக்காததால், தாளவாடி விவசாயி குணசேகரன், 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த முட்டைகோசை டிரக்டர் மூலம் உழவு செய்து அழித்தார். மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement