Load Image
Advertisement

1930க்கு அழைக்க சொல்கிறது சைபர் கிரைம் போலீஸ்

தொழில், நிதி நிறுவனங்கள் பெயரில், ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள், தற்போது அரசு உயர் அதிகாரிகள் பெயரில் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். உயர் அதிகாரிகள் பெயரில், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரில் வரும் மெசேஜ்களில், அதிகாரிகளின் போட்டோ இடம் பெறுவதால், அந்த மெசேஜை பலரும் பணம் அனுப்பி ஏமாறுகின்றனர். போலீஸ் டிஜிபி, எஸ்பிக்கள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், பிரபலங்கள் பெயரில் இந்த மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர். இதுபோன்ற மெசேஜ் வந்தால், 1930 என்ற எண்ணுக்கு உடனே தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement