Load Image
Advertisement

கர்நாடகாவில் புதிய அரசு: இந்தியாவுக்கே விடியல் வரும் என்கிறார் ஸ்டாலின் | Siddaramaiah oath ceremony

கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. முதல்வராக சித்தராமய்யா, துணை முதல்வராக சிவகுமார் பதவி ஏற்றனர். அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, சித்தராமய்யா, சிவகுமார் 2 பேருக்கும் வாழ்த்து சொன்னார். ஆட்சி காலம் இனிதாக அமையட்டும் என்றார். பாஜவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையும் வாழ்த்து கூறினர். சித்தராமய்யாவுக்கும் அவரது அமைச்சரவையில் பொறுப்பேற்றோருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்து சொல்வதாக பொம்மை சொன்னார். முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். மதசார்பற்ற இரட்டையர்களின் தலைமை கர்நாடகாவை வளர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புவதாக சொன்னார். தென்இந்தியாவுக்கு கிடைத்த இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிக்கும் பரவ வேண்டும். அந்த மாற்றத்துக்கான துவக்கம் தான் கர்நாடகாவில் அமைந்திருக்கும் புதிய அரசு என்றும் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement