Load Image
Advertisement

தமிழக அரசின் நிவாரண அறிவிப்பில் விநோதம் | DMK | Stalin

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 22 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடல்களில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் பறந்தன. கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இதற்கு வக்காலத்து வாங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இறந்தவர்கள் ஏழைகள். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது எனக்கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், சிவகாசி அருகே ஊராம்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் குமரேசன், அய்யம்மாள், சுந்தர்ராஜ் ஆகிய 3 பேர் இறந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உடலுக்கு கெடுதி என தெரிந்தும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம். ஆனால், வயிற்று பிழைப்புக்காக பட்டாசு ஆலையில் வேலை செய்து, எதிர்பாராத விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் தானா. இது என்ன வினோதம் என ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement