Load Image
Advertisement

சாராயத்தால் குடும்பத்தை இழந்த சிறுவன் சொல்லும் பகீர் தகவல் | Villupuram Liquor Issue

செங்கல்பட்டு, மரக்காணம் பகுதிகளில் சாராயம் குடித்த 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சாராய விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. இதுவரை 3762 பேர் சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டனர். சாராய விற்பனையை தாண்டி சில இடங்களில் கூலியாகவும் சாராயம் கொடுப்பது தெரிய வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேர் சாராயம் குடித்து இறந்தனர். வசந்தா என்பவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்தனர். அவர்கள் குடித்த சாராயம் விறகு வெட்டியதற்கு கூலியாக கொடுக்கப்பட்டது என்கிறார் வசந்தாவின் மகன் ஆறுமுகம். அம்மாவாசை என்பவரிடம் விறகு வெட்ட சென்ற என் மாமா சின்னத்தம்பிக்கு கூலிக்கு பதில் சாராயம் கொடுத்தனர். வீட்டுக்கு வாங்கி வந்த மாமா, அம்மா வசந்தா, அக்கா அஞ்சலிக்கு கொடுத்தார். மூவரும் ஒன்றாக சேர்ந்து குடித்தனர். கண் பார்வை இழந்து இறந்தனர். அவர்கள் சாவுக்கு அம்மாவாசை தந்த சாராயம் தான் காரணம் என ஆறுமுகம் கூறினார். அம்மாவாசையும் அதே சராயத்தை குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸ் தேடுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement