Load Image
Advertisement

சென்னை டு ஆந்திரா 5 கிலோ தங்க கட்டி கடத்தல்

2 காரில் இருந்த 4 பேர் கைது திருப்பதி மாவட்ட போலீசார் சூலூர் பேட்டை சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து - நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த 2 கார்களை சோதனை செய்தனர். அந்த கார்களில் 13 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றின் எடை 5 கிலோ 201 கிராம். மதிப்பு ரூ 2.50 கோடி. உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க கட்டிகளை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. தங்கம் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement